திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர் கோவில் திருச்சிக்கு அருகே உள்ள பழமையான கோவிலாகும். இது சப்தரிஷிகளால் வழிபட்டதாகக் கருதப்படுகிறது.
இங்கு இறைவன் சப்தரிஷீஸ்வரர்,இறைவி குங்கும வல்லி அருள் பாலிக்கின்றனர் குளித்தலைக்குக் கிழக்கே இது அமைந்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த சிவன்கோவில் சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்து இராவணனுக்கு காட்சி கொடுத்த தலமாகும். புரூரவஸ் சக்கரவர்த்திக்கு ப்ரம்ம கத்தி தோஷம் ஏற்பட்டதாகவும் இக்கோவில் வந்து வழிபட்டதால் அது நீங்கிய தாகவும் நம்பப்படுகிறது.
ராமாயணகாலத்துக்கும் முந்தைய கோவில் என்று இக் கோவில் வரலாறு கூறுகிறது. இராவணன் தன் தலைகளை திருகி யாகத்தில் வீசியதால் ஆதியில் திருகுதலையூர் என அழைக்கப்பட்ட இது காலப்போக்கில் மருவி திருத்தலையூர் ஆனது.
இலங்கையிலிருந்து இராவணன் கைலாயம் நோக்கி நோக்கி வரும் வழியில் இப்பகுதி வனாந்திரமாக இருப்பது கண்டு இங்கேயே தங்கிவிட்டார். இப்பகுதியில் யாகம் வளர்த்து சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த சப்தரிஷிகள் பத்துமலை இராவணனைக் கண்டதும் நடுங்கி மருதம் மரத்தில் ஐக்கியமாகி விடுகின்றனர்.
அந்த மரமே திருக்கோவில் தலமரமாக உள்ளது. ரிஷிகள் வழிபட்ட லிங்கத்தை தான் வழிபடுவதா என்று எண்ணிய இராவணன் புற்று மண் எடுத்து புதிதாக ஒரு பெரிய லிங்கத்தை உருவாக்கி வழிபடத் தெடங்கினான். தொடர்ந்து யாகம் செய்தான். பல நாட்கள் கடந்தும் சிவபெருமான் தரிசனமா தரவில்லை.
மிகவும் வெறுத்துப்போன இராவணன் பத்து தலைகளில் ஒவ்வொன்றாகத் திருகி யாகத்தில் வீசினான் ஒருதலை மட்டுமே மிஞ்சியது அப்போதும் ஈசன் வரவில்லை. தன் பத்தாவது தலையை திருக முயன்றபோது இராவணனுக்கு ஈசன் நெற்றிக் கண்ணைத் திறந்தபடி காட்சி அளித்தார்.
மற்ற ஒன்பது தலைகளையும் ஒட்டவைத்து மீண்டும் அவனை பத்துதலை இராவணனாக்கினார். இராவணன் தான் பிடித்து வைத்த புற்றுமண் லிங்கத்தைவணங்கி கைலாயம் புறப்பட்டுச் சென்றான். இத்தகைய வரலாற்றுச் சிறப்புகள் கொண்டது திருத்தலையூர். இது தேவாரத்தில் பாடப்பட்ட தலமாகும். தில்லையில் ஆயிரம் ஆனால் திருத்தலையூரில் ஆயிரத்து ஐநூறு சைவ வைணவ பிராம்மணர்கள் என்று பாடப்பட்ட வரிகள் மிகவும் பிரசித்தமானது.
1008 சிவலிங்கங்கள் அமைந்த அரியனூர் திருக்கோவில்: சேலத்தின் அற்புத ஆன்மீக அதிசயம்!63 நாயன்மார்களில் ஒருவரான உருத்ரபதி நாயனார் பிறந்த தலம். இவர் இக்கோவிலிலேயே முக்தி பெற்றார். இங்கு திருமால் மூன்று விரல்களை மடக்கியபடி துளசியை தலைகீழாகப் பிடித்தபடி காட்சி தருகிறார். அவர் இராவணனிடம் "நீ பெற்றவரம்படி உனக்கு மூன்றரை கோடி ஆண்டுகளாகும். மூன்று கோடி பெற்றுவிட்டாய் இன்னும் அரை கோடியை சிவனிடம் பெற்றுக்கொள் என்றுகூறி இராவணன் இங்கு யாகம் நடத்தி தனக்குக் காட்சி அளித்த சிவனிடம் மூன்றரை கோடிக்கு பதில் அரை கோடி என்று தவறுதலாக கேட்டதால் மூன்று கோடி ஆண்டுகளை இழந்தான்.
இது அகோரத்தலம். இராவணனுக்கு ஈசன் நெற்றிக் கண்ணைத் திறந்தபோது அகோரமூர்த்தி உருவானார் இங்கு அகோரவீரபத்திரர் காட்சி தருகிறார். இக்கோவில் ஏதிரேயே குளம் அமைந்துள்ளது. தனிச்சிறப்பு பிரம்மஹத்தி தோஷங்களைப் போக்கும் தலம். திருமணத்தடைகளையும் நீக்கும் தலம்.
அத்ரி, ப்ருகு, புலஸ்த்கியர், வசிஷ்டர், கௌதமர், மரீசி மற்றும் ஆங்கீரஸர் என்ற ஏழு சப்த ரிஷிகள் வழிபட்ட தலமாதலால் இது சப்த ரரிஷீஸ்வரர் கேஸில் என்றும் அழைக்கப்படுகிறது. இராமாயணக் காலத்துக்கும் முந்தைய பழமைவாய்ந்த சித்தத்தை அவசியம் எல்லோரும் தரிசிக்கவேண்டும்.
திருமணத் தடையை நீக்கும் 1300 ஆண்டுகள் பழமையான தர்மபுரி கோட்டை கோவில்!
