Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திருவண்ணாமலை மகா தீபம் 2026: பக்தர்களுக்கு அதிரடி தடை! முழு விவரம்.!!

திருவண்ணாமலை மகா தீபம் 2026: பக்தர்களுக்கு அதிரடி தடை! முழு விவரம்.!!

Kalki Online 11 hrs ago

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்தன்று, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபம் ஏற்றுவது வழக்கம்.

மகா தீபத்தின் போது, பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கூட்ட நெரிசலைத் தவிர்க்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அவ்வகையில் வருகின்ற நவம்பர் 24-ம் தேதி மகா தீபம் ஏற்றப்படும் நாளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மலை மீது ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால், பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் மகா தீபத்தின் போது மலை மீது ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பரணி தீபத்தைத் தொடர்ந்து, நவம்பர் 24-ல் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு 2,668 அடி உயரமுள்ள மலை மீது பக்தர்கள் ஏற கடுமையான கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய விவரங்கள்:

பாதுகாப்பு மற்றும் இடநெருக்கடி:

மகா தீபத் திருவிழா நாளன்று, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். ஆகையால் மலையின் குறுகிய செங்குத்தான பாதைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, நிலச்சரிவு மற்றும் விபத்துகள் உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதனைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அனுமதி விவரம்:

மகா தீபம் ஏற்றப்படும் நவம்பர் 24-ம் தேதியன்று, தீபக் கொப்பரை, நெய் மற்றும் திரி கொண்டு செல்லும் கோயில் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு மட்டுமே மலை உச்சிக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும். பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கிரிவலம்:

மகா தீபம் ஏற்றும் மலை மீது பக்தர்கள் ஏற தடை விதிக்கப்பட்டாலும், வழக்கம் போல் மலையைச் சுற்றியுள்ள 14 கிமீ தொலைவு கிரிவலப் பாதையில், பக்தர்கள் அனைவரும் கிரிவலம் வந்து மகா தீபத்தை எளிதில் தரிசிக்கும் படி விரிவான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்படும்.

மகா தீபத்தன்று ஆன்லைன் முன்பதிவு, வழிகாட்டுதல்கள் மற்றும் மலை ஏறுவது தொடர்பான கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை பக்தர்கள் பின்பற்ற வேண்டும்.

 Tiruvannamalai Karthigai Deepamதீபாவளி சிறப்பு பேருந்துகள்: சென்னையில் எந்த ஊருக்கு எங்கிருந்து பேருந்து? முழு விவரம் இதோ.!

வடகிழக்குப் பருவமழை காரணமாக மலையின் சில பகுதிகளில் மண் இளகி, நிலச்சரிவு ஏற்படவும், பாறைகள் சரியவும் அதிக வாய்ப்பு உள்ளது என புவியியல் மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவின் ஆய்வறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றச் செல்லும் கோயில் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்புத் துறையினர் தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

மாவட்ட நிர்வாகத்தின் தடையை மீறி அடர்ந்த காட்டுப் பகுதிகள் வழியாக மலையேற யாரேனும் முயற்சித்தால், வனப் பாதுகாப்புச் சட்டத்தின் படி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடிமேல் அடி! 4 நாட்களில் ரூ.5,240 உயர்வு.! தங்கம் விலையின் திக் திக் ஆட்டம்!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online