Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உடல் சூட்டை தணிக்கும் 'மேஜிக்' பானங்கள்! வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

உடல் சூட்டை தணிக்கும் 'மேஜிக்' பானங்கள்! வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

Kalki Online 3 months ago

கேரட் கீர்

கேரட்-3,ஃபுல் க்ரீம் மில்க்-4கப், சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை -1/2கப்,ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை -1டேபிள் ஸ்பூன்.தேன்-1டீஸ்பூன்.

செய்முறை:

நெய்யில் கேரட் துருவலை நன்கு வதக்கவும். இதோடு பால் சேர்த்து நன்கு கிளறி பாதியாக குறையும்வரை விடவும். இதில் வறுத்த முந்திரி திராட்சை ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். சற்று ஆறியதும் அல்லது குளிர்வித்து தேன் மேலாக ஊற்றி பரிமாறவும். தேர்வு எழுத போகும் பிள்ளைகளுக்கு,எக்ஸாம் எழுதி விட்டு களைப்பாக வரும் பிள்ளைகளுக்கு கொடுக்க இன்ஸ்டன்ட் எனர்ஜி கிடைக்கும்.

வெள்ளரி, வெங்காய மோர்

தேவையானவை:

மோர்-2கப்,துருவிய வெள்ளரி-1/2கப், சின்ன வெங்காயம் 2-4,உப்பு,விருப்பம் எனில் புதினா, மல்லி பொடியாக நறுக்கியது.

வெங்காயத்தை உரித்துக் கொண்டு இதனுடன் உப்பு, மோர், வெள்ளரி துருவிய தை போட்டு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதை குளிர வைத்தோ அப்படியேவாக மல்லி, புதினா தூவி பரிமாறவும். உடலுக்கு குளிர்ச்சி தந்து மனதை சாந்திப்படுத்தும் எளிமையான பானம்.

லெமன் பார்லி

தேவையானவை:

எலுமிச்சை ஜுஸ்-1/2கப், சர்க்கரை -3/4கப், தண்ணீர், பார்லி பவுடர்-1டீஸ்பூன், விருப்பம் எனில் எல்லோ கலர், லெமன் எசென்ஸ், உப்பு.

பெரிய வெங்காயம் சின்னதா வாங்கு, சின்ன வெங்காயம் பெரியதா வாங்கு!

செய்முறை:

எலுமிச்சை சாறு பிழிந்து அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து வைக்க கசப்பு ஏறாது. ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில் கரைத்த பார்லி பவுடர் கலவையை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும். இறக்கி வைத்து ஆறவிடவும். இதில் எலுமிச்சை ஜுஸ், எசென்ஸ், கலர் கலந்து டம்ளரில் நிரப்பி அப்படியேயோ அல்லது குளிர்வித்தோ கொடுக்கவும். உடலை குளிர்வித்து நீர்ச்சுருக்கு, போன்ற சிறுநீரக பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

ஃப்ரூட் சாலட் வித் ஹனி

தேவையானவை:

பழங்கள் துண்டுகளாக அரிந்தது-3கப், மாதுளை முத்துக்கள் -1/4கப், ஏலப்பொடி, தேன் -4டீஸ்பூன்.

செய்முறை:

அனைத்து பழத்துண்டுகளையும், ஏலப்பொடி, தேன் சேர்த்து ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும். குளிர்வித்து பரிமாறவும். ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த பழங்களின் சத்துக்களும் கூடிய சாலட் வயிற்றுக்கு இதமளித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online