Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
UPI-யில் புதிய அதிரடி மாற்றம்..! ரூ.5 லட்சம் வரை அனுப்பும் வசதி -யாருக்கெல்லாம் கிடைக்கும்..?

UPI-யில் புதிய அதிரடி மாற்றம்..! ரூ.5 லட்சம் வரை அனுப்பும் வசதி -யாருக்கெல்லாம் கிடைக்கும்..?

Kalki Online 1 week ago

ன்றைய டிஜிட்டல் காலத்தில், யுபிஐ (UPI) வாயிலாக பண பரிவர்த்தனைகள் நடைபெறுவது அதிகரித்துள்ளது. பெட்டிக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை யுபிஐ வழியாக பணம் செலுத்தும் வசதி உள்ளது.

சில வினாடிகளில் பணம் அனுப்பிவிட முடியும் என்பதால், பயனர்கள் மத்தியில் யுபிஐ பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

யுபிஐயில் பயனர்களின் நலன் கருதி அவ்வப்போது புதிய அப்டேட்களையும் NPCI (என்பிசிஐ) வெளியிட்டு வருகிறது.

பொதுவாக நபர்-நபர் (P2P) பணப் பரிவர்த்தனைக்கு இப்போதும் ரூ.1 லட்சம் என்ற எல்லைதான் நடைமுறையில் உள்ளது என்றே பலரும் கருதுகின்றனர். ஆனால், யுபிஐ மூலம் செய்யப்படும் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் இந்த ரூ.1 லட்சம் வரம்பு பொருந்தாது.

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகியவை குறிப்பிட்ட சில தேவைகளுக்கு கூடுதல் பணப் பரிவர்த்தனை வரம்புகளை அனுமதித்துள்ளன.

அந்த வகையில் யாருக்கெல்லாம் ரூ.5 லட்சம் வரம்பு பொருந்தும்?

* பெரிய மருத்துவமனைகளில் மருத்துவச் சிகிச்சை மற்றும் கட்டணம் செலுத்தும்போது ரூ.5 லட்சம் வரை யுபிஐ மூலம் செலுத்தலாம்.

* பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குக் கல்விக் கட்டணம் செலுத்த இந்த உயர் வரம்பு பொருந்தும்.

* அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை ((Tax Payments) யுபிஐ மூலம் ஒரே பரிவர்த்தனையாக ரூ.5 லட்சம் வரை செலுத்தலாம்.

* பங்குச் சந்தையில் ஐபிஓ (IPO) விண்ணப்பங்கள் மற்றும் அரசுப் பத்திரங்கள் வாங்குவதற்கு இந்த வசதி உண்டு.

* காப்பீட்டு பிரீமியம் (Insurance Premium) மற்றும் மூலதனச் சந்தை முதலீடுகளுக்கும் இது பொருந்தும்.

மேலும், 'யுபிஐ லைட்' மற்றும் 'யுபிஐ 123பே' போன்ற சேவைகளுக்கு தனித்தனியான வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எனவே, அதிக தொகை செலுத்துவதற்கு முன், நீங்க செய்யும் பரிவர்த்தனை எந்த வரம்பிற்குள் வருகிறது என்பதை அறிந்துகொள்வது அவசியம்.

வழக்கமான இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) சாதாரண நபர்-to-நபர் (P2P) மற்றும் நபர்-to-வணிகர் (P2M) UPI பரிவர்த்தனைகளுக்கு நிர்ணயித்துள்ள பொதுவான தினசரி வரம்பு ரூ. 1 லட்சமாகும்.

கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், IPO முதலீடுகள் மற்றும் ரிசர்வ் வங்கி (RBI) சில்லறை நேரடித் திட்டங்களுக்கான பரிவர்த்தனைகளுக்கு தினசரி வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

 யுபிஐ வரம்பு

எனினும், மூலதனச் சந்தைப் பரிவர்த்தனைகள் (Capital Markets), IPO விண்ணப்பங்கள், கடன் வசூல், காப்பீடு (Insurance), மருத்துவமனைகள், கல்வி மற்றும் ரிசர்வ் வங்கி (RBI) சில்லறை நேரடித் திட்டங்களுக்கான பரிவர்த்தனை போன்ற குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு இந்த வரம்பை ஒழுங்குமுறை அமைப்புகள் படிப்படியாக உயர்த்தியுள்ளன. இதன் மூலம், யுபிஐ வாயிலாக அனுப்பக்கூடிய பணத்தின் அளவு, எந்த நோக்கத்திற்காகச் செலுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது.

யுபிஐ வரம்பு உயர்த்தப்பட்டுள்ள முக்கியப் பிரிவுகளில் வரி செலுத்துதலும் ஒன்றாகும். வரி செலுத்துவதற்கான யுபிஐ வரம்பை ரிசர்வ் வங்கி ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரூ.3 லட்சம் போன்ற பெரிய தொகையிலான வரிகளைக்கூட எந்தத் தடையுமின்றி யுபிஐ மூலம் எளிதாக செலுத்த முடியும்.

மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்குச் செலுத்தப்படும் கட்டணங்களுக்கும் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை அனுமதிக்கப்படுகிறது. ஐ.பி.ஓ (IPO) விண்ணப்பங்கள் மற்றும் 'RBI Retail Direct Scheme' திட்டத்தின் கீழான முதலீடுகளுக்கும் ரூ.5 லட்சம் வரம்பு பொருந்தும்.

குறிப்பிட்ட மூலதனச் சந்தை (Capital Markets), சில குறிப்பிட்ட கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் காப்பீட்டுத் தொகை (Insurance) மற்றும் வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் (Remittances) போன்ற சில குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு வரம்பு ரூ. 2 லட்சம் ஆகும்.

NPCI பொதுவான வரம்பை அமைத்திருந்தாலும், ஒவ்வொரு தனியுரிம வங்கியும் (HDFC, SBI, ICICI போன்றவை) தங்களுக்கு என்று பிரத்யேக தினசரி வரம்புகளை (சில வங்கிகளில் ரூ. 25,000 அல்லது ரூ. 50,000) கொண்டிருக்கலாம்.

அனைத்து யுபிஐ தயாரிப்புகளும் ஒரே விதியைப் பின்பற்றுவதில்லை. சிறிய அளவிலான அன்றாடப் பரிவர்த்தனைகளுக்காக உருவாக்கப்பட்ட இந்தச் சேவையில், ஒரு முறைக்கு அதிகபட்சமாக ரூ.1,000 வரை மட்டுமே செலுத்த முடியும். இந்தச் சேவையின் ஆன்-டிவைஸ் (On-device) வாலட்டில் அதிகபட்சமாக ரூ.5,000 வரை இருப்பு வைத்திருக்கலாம். வங்கிகளின் முக்கிய கணினி கட்டமைப்பின் மீதான சுமையைக் குறைக்கவும், சிறிய அளவிலான அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளை (தினசரி மளிகைப் பொருட்கள் வாங்குதல், பயணக் கட்டணம் போன்றவை) விரைவாகச் செய்யவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1 முதல் ஏடிஎம்-ல் பணம் எடுத்தால் ரூ.23 கட்? புதிய 'யுபிஐ' விதியால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

இச்சேவையைப் பயன்படுத்திப் பணம் செலுத்தும்போது பயனர்கள் தங்களின் யுபிஐ பின்னை (UPI PIN) உள்ளிடத் தேவையில்லை.

சாதாரண 'பீச்சர்' போன்களில் (Feature Phone) இணைய வசதி இல்லாமல் யுபிஐ பரிவர்த்தனை செய்ய அறிமுகப்படுத்தப்பட்ட இச்சேவையில், ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை அனுப்ப முடியும். ஆரம்பத்தில் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5,000 ஆக இருந்த வரம்பு, பின்னர் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டது.

ஒரு பரிவர்த்தனை NPCI அனுமதித்த அதிகபட்ச வரம்பிற்குள் இருந்தாலும், வாடிக்கையாளரால் முழுத் தொகையையும் அனுப்ப முடியாமல் போக வாய்ப்புள்ளது. யுபிஐ கட்டமைப்பில் உள்ள வங்கிகள், பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு தங்களுக்கென தனிப்பட்ட உள் வரம்புகளை (Internal Limits) நிர்ணயிக்க உரிமை கொண்டுள்ளன.

எனவே, நிர்ணயிக்கப்பட்ட யுபிஐ வரம்பிற்குள் பரிவர்த்தனை செய்தும் அது நிராகரிக்கப்பட்டால், உங்கள் வங்கி அல்லது நீங்கள் பயன்படுத்தும் யுபிஐ செயலி விதித்துள்ள வரம்புகளைச் சரிபார்க்க வேண்டும். யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பு என்பது அனைத்திற்கும் பொதுவாக ரூ.1 லட்சம் மட்டுமே அல்ல;

இன்டர்நெட் வேண்டாம்... ஸ்மார்ட்போனும் வேண்டாம்! ₹2,000 வரை யுபிஐ மூலம் பணம் அனுப்பலாம்!

பணம் செலுத்தும் பிரிவு, பயன்படுத்தும் யுபிஐ சேவை, எதற்காகப் பணம் செலுத்துகிறீர்கள், எந்த வங்கியின் சேவையைப் பயன்படுத்துகிறீர்கள் மற்றும் உங்கள் வங்கி நிர்ணயித்துள்ள வரம்புகளைப் பொறுத்தே அதிகபட்சத் தொகை தீர்மானிக்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online