Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உறவுகளில் நம்பிக்கை உடையும்போது... மனித மனம் எதிர்கொள்ளும் ஆபத்து!

உறவுகளில் நம்பிக்கை உடையும்போது... மனித மனம் எதிர்கொள்ளும் ஆபத்து!

Kalki Online 2 weeks ago

நம்பிக்கை என்பது ஒரு உறவின் மிக முக்கியமான மற்றும் பலவீனமான அடித்தளம் ஆகும். அதை உடைப்பது என்பது ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்.

நம்மை முழுமையாக நம்பியவர்கள் ஏமாற்றப்படும் போது, அவர்கள் கடுமையான ஏமாற்றத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாவார்கள்.

ஏமாற்றுவது என்பது நம்மை முழுமையாக நம்பிய ஒருவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும். பணத்தையோ பொருளையோ இழந்துவிட்டால் கூட சம்பாதித்து விடலாம். ஆனால் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவது என்பது சாத்தியமற்றது.

ஏமாற்றப்பட்ட நபர் கடுமையான மன உளைச்சலுக்கும், மற்றொருவர் மீது மீண்டும் நம்பிக்கை வைக்க முடியாத நிலைக்கும் தள்ளப்படுவார்கள். நம்மால் ஒருமுறை உடைந்த நம்பிக்கையை எவ்வளவு முயன்றாலும் மீண்டும் பழையபடி கட்டி எழுப்ப முடியாது. இது உறவுகளை நிரந்தரமாகப் பிரித்துவிடும்.

மற்றவர்களை ஏமாற்றுவது தற்காலிகமாக லாபத்தைத் தந்தாலும் அது நம் சொந்த நேர்மையையும், சுயமரியாதையையும், சமூகத்தில் நமக்குண்டான நற்பெயரையும் அழித்துவிடும். நம்மை நம்பியவர்களுக்கே நாம் உண்மையாக இல்லை என்பது தெரிய வந்தால், எதிர்காலத்தில் நம்மை மற்றவர்களும் நம்பத் தயங்குவார்கள். சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், உண்மையை வெளிப்படையாகக் கூறிவிடுவதே எப்பொழுதும் நல்லது.

உண்மை மற்றும் நேர்மையுடன் கூடிய உறவுகளே எப்போதும் நிலைத்து நிற்கும். ஒருவர் நம் மீது வைக்கும் அதீத நம்பிக்கை என்பது ஒரு பெரிய பொறுப்பு. அதை உடைப்பது அந்த நபருக்கு கடுமையான வருத்தத்தையும், இந்த சமூகத்தின் மீது நம்பிக்கை இன்மையையும் ஏற்படுத்தும். எந்த ஒரு நல்லுறவிற்கும் (நட்பு, காதல், குடும்பம், தொழில்) அடிப்படையே நம்பிக்கை தான். அதை ஏமாற்றுவது அறநெறிக்கு எதிரானது. ஏமாற்றப்பட்டவர்கள் பிற்காலத்தில் யாரையுமே நம்ப முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

 நம்பிக்கை

நாம் செய்யும் செயல்களுக்கான விளைவுகளை நாமே அறுவடை செய்ய நேரிடும். தற்காலிக லாபத்திற்காக நம்பிக்கை இழப்பது நீண்ட காலத்திற்கு நஷ்டத்தையே உண்டு பண்ணும்.

மற்றவர்களின் நம்பிக்கையைத் தக்க வைப்பது தான் மனிதநேயம். அதை நம் சுயநலத்திற்காக பயன்படுத்துவது தர்மத்திற்கு புறம்பானது.

உங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்களா? தேவை முடியும்போது விலகும் போலி உறவுகள்!

"வஞ்சனை செய்பவருக்கு வாழ்வு இல்லை" என்பது பழமொழி. நம்பிக்கையை உடைப்பது என்பது எப்பொழுதுமே தவறான விஷயம் தான். ஒருவரின் நம்பிக்கையைப் பெறுவது மிகவும் கடினம்.

ஆனால் அதை ஒரே நொடியில் உடைத்து விட முடியும். அது ஒரு உறவின் அஸ்திவாரத்தையே அசைத்து விடும். எந்த ஒரு சூழ்நிலையிலும் துரோகமும் ஏமாற்றுதலும் நியாயப்படுத்த முடியாதவை. உண்மையான உறவுகள் அனைத்துமே நம்பிக்கையின் அடிப்படையிலேயே உருவாகின்றன. நம்பிக்கை என்பது ஒருவருக்கு நாம் கொடுக்கும் மிக உயர்ந்த மதிப்பு. அதை எப்போதும் பாதுகாப்பதே மனிதத் தன்மை.

ஒருவேளை அப்படி ஒருவரை ரொம்பவும் நம்பி பிறகு ஏமாந்து விட்டால், அந்த நம்பிக்கை துரோகத்தை கையாள்வது மனதிற்கு மிகவும் வேதனையானது என்றாலும் அதிலிருந்து மீண்டு வருவதற்கு கோபம், சோகம், ஏமாற்றம் போன்ற உணர்வுகளை அடக்காமல் முதலில் முழுமையாக உணர்ந்து விடுவதுடன், நடந்ததை மறுக்காமல் மனதளவில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நகைச்சுவை உணர்வு ஏன் அவசியம்? வாழ்க்கை மாற உதவும் ரகசியம்!

கோபத்தின் உச்சத்தில் இருக்கும்போது அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காமல், எதிர்வினை ஆற்றாமல் சிறிது அமைதியாக சிந்தித்து தெளிவு பெறவேண்டும். அத்துடன் துரோகம் செய்தவருடன் உள்ள உறவைத் தொடரவேண்டுமா அல்லது விலகிக்கொள்ள வேண்டுமா என்பதை நிதானமாக முடிவு செய்து நம் எல்லைகளை உறுதியாக வைக்க வேண்டும். குறிப்பாக நம்பிக்கை துரோகம் ஏற்பட்ட சமயத்தில் மனம் உடைந்து போகாமல் நம் உடல் மற்றும் மன நலனில் கவனம் செலுத்துவது அவசியம்.

நம் மனதுக்குப் பிடித்தமான செயல்களில் கவனத்தை திசை திருப்புவதும், நல்ல தூக்கம், சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதும், நம்மைச் சுற்றி நம்பிக்கையான குடும்பத்தினரை வைத்துக்கொள்வதும் நல்லது. முக்கியமாக நம்பிக்கை துரோகம் செய்தவர்களை மன்னிப்பது சிறப்பு. காரணம் அவர்கள் செய்த தவறை நியாயப்படுத்துவதற்காக மன்னிப்பதல்ல. நம் மனதை சுமைகளில் இருந்து விடுவித்துக் கொள்வதற்காக அவர்கள் செய்த தவறை மன்னிப்பது நல்லது.

நம்பிக்கையை இழப்பதால் ஏற்படும் மனச் சுமையிலிருந்து விடுபட்டு, சுயமரியாதையுடன் மீண்டு எழுவதற்கான உளவியல் தெளிவையும் மன அமைதியையும் வாசகர் பெறுவார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online