Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உருளைக்கிழங்கு மேஜிக்: பளபளக்கும் முகத்திற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய அழகு ரகசியங்கள்!

உருளைக்கிழங்கு மேஜிக்: பளபளக்கும் முகத்திற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய அழகு ரகசியங்கள்!

Kalki Online 2 months ago

ம் சருமத்தை எளிதாக பராமரிக்க எந்தவித உபாதைகளும் ஏற்படாமல் தவிர்க்க வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முகத்தை எப்படி பராமரிக்கலாம்.

அதிகம் செலவழிக்க தேவையில்லாத இந்த உருளைக்கிழங்கால் உங்கள் சருமத்தை பராமரிக்கும் எளிய வழிகள்.

உருளைக்கிழங்கில் கலோரிகள், பொட்டாசியம், விட்டமின் சி, தாது உப்புக்கள், மாவு சத்துக்கள், நார்ச்சத்துக்கள் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.

1. கருவளையம் நீங்க

கண்களைச்சுற்றிய கருவளையம், கண்கீழே உள்ள வீக்கம் போன்றவை நீங்க தோல் நீக்கிய உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து அந்தச்சாறை பஞ்சினால் தொட்டு கண்களை சுற்றி தேய்த்து காய்ந்ததும் கழுவினால் சரியாகும். இதனை வாரம் இருமுறை செய்யலாம்.

2. எண்ணெய் சருமம் நீங்க

உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து முகம் கழுத்துப் பகுதியில் தடவி பத்து நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய்ப் பசையும் நீங்கும்.

3. முடி உதிராமல் இருக்க

முடி உதிராமல் இருக்கவும், அடர்த்தியான கூந்தல் வளரவும், அரை கப் உருளைசாறுடன், அரை கப் சின்ன வெங்காயம் சாறு கலந்து தலைமுடியில் தடவி ஒருமணி நேரம் ஊறவைத்து பின் தண்ணீரில் தலை முடியை அலசவும். இப்படி செய்வதால் முடியின் வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

 சரும பராமரிப்பு

4. சரும தழும்புகள் மறைய

உருளைக்கிழங்கு அரைத்த பேஸ்ட்டுடன், 2 டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் தழும்புகள் மறையும்.

5. அரிப்பு நீங்க

தலையில் அடிக்கடி ஏற்படும் அரிப்பு நீங்க உருளைக்கிழங்கு சாறு எடுத்து அதை தலையில் தடவி 10 நிமிடம் ஊறிய பின் குளித்தால் அரிப்பு நீங்கும். இதனை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்யலாம்.

6. பொடுகு நீங்க

உருளைக்கிழங்கை வேக வைத்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் முடியின் வேர்க்கால்களில் தடவி ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் பொடுகு, அரிப்பு தவிர்க்கப்படும்.

7. முகம் பள பளக்க

உருளைக்கிழங்கு சாறுடன், தேன், சிறிது பால் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

8. முகம் பளபளக்க கடலை மாவு கொண்டு செய்யப்படும் சரும பராமரிப்பு குறிப்புகள்

சரும அழகை மேம்படுத்த கடலை மாவு கொண்டு பராமரிப்பு செய்தால் சருமத்துளைகள் சுருங்கி சருமம் பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.

பிசுபிசுப்பு இல்லாத கூந்தல் மற்றும் ஜொலிக்கும் முகம் - எளிய ரகசியங்கள்!

ஒரு பவுலில் இரண்டு டேபிள்ஸ்பூன் கடலை மாவு எடுத்து அதனுடன் பாதி எலுமிச்சை சாறு பிழிந்து ஒரு டேபிள் ஸ்பூன் மில்க் க்ரீம் சேர்த்து பேஸ்ட் செய்து அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்த பின் குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்து முகத்தை கழுவினால் முகம் பொலிவாகும்.

ஒரு பவுலில் கடலை மாவுடன் சிறிது பப்பாளி கூழ் மற்றும் சிறிது ஆரஞ்சு பழம் சாறுசேர்த்து கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவி நன்கு காய வைத்து பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் முகம் பொலிவாகும்.

ஒரு பவுலில் சிறிது கடலை மாவு, தேன், பாதாம் எண்ணெய் ஆகியவற்றை எடுத்து சிறிது தயிர், முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவி காய வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் நிறம் கொடுத்து பொலிவு பெறும்.

வெயில் கால கருமையா? இந்த இயற்கை வைத்தியங்கள் உங்கள் சருமத்தை மாற்றும்!

ஒரு பவுலில் சிறிது கடலை மாவு எடுத்து அதனுடன் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணையை வெளியேற்றி முகத்திற்கு உடனடி பொலிவு தரும்.

ரசாயனப் பொருட்கள் கலக்காத இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு உங்கள் சருமத்தை பொலிவாகவும், தலைமுடியை ஆரோக்கியமாகவும் மாற்றி நீடித்த அழகைப் பெறலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online