Dailyhunt
உயில் இல்லாமல் சொத்தைப் பிரிப்பது எப்படி?

உயில் இல்லாமல் சொத்தைப் பிரிப்பது எப்படி?

Kalki Online 1 year ago

சொத்துரிமை தொடர்பான சட்ட நடைமுறைகள் பலருக்கும் புரியாத புதிராகத்தான் இருந்து வருகிறது. குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட அல்லது பரம்பரை சொத்தை தங்களின் பெயருக்கு மாற்றும் நடைமுறை குறித்து பலருக்கும் தெரிவதில்லை.

இந்த செயல்பாட்டில் தங்களின் உரிமைகள் என்ன? சட்ட நடைமுறைகள் என்னென்ன? என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். எனவே வாரிசுகள் தங்கள் உரிமையை பாதுகாப்பதற்கும், சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும் தேவையான விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

பரம்பரை உரிமையை நிரூபிக்க தேவைப்படும் ஆவணங்கள்:

பரம்பரை சொத்துக்கு உரிமை கோரும்போது, அதற்கு தேவையான சரியான ஆதாரத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாகும். உயில் அடிப்படையில் சொத்துக்கள் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டிருந்தாலோ அல்லது வாரிசுகளின் பெயர்கள் தெள்ளத்தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தாலோ சொத்தை மாற்றுவது எளிதான செயல்முறையே. ஆனால் உயிலின் விதிகள் சட்டத்திற்கு முரணாக இருந்து அல்லது மற்ற வாரிசுகளுக்கு அவை ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தால் சட்ட நடவடிக்கைகள் தேவைப்படலாம்.

உயில் இல்லாமல் சொத்தைப் பிரிப்பது எப்படி?

ஒருவர் உயில் எழுதாமல் இறந்து போனால் அவரது சொத்துக்களை பிரிப்பது சற்று சிக்கலான விஷயமாக இருக்கலாம். ஏனென்றால் உயில் இல்லாத நிலையில் சொத்து யாருக்கு சொந்தம் என்பது சட்டப்படிதான் தீர்மானிக்கப்பட வேண்டும். ஒருவேளை வாரிசுகளிடையே ஒற்றுமை இருந்து தங்கள் சொத்துக்களை பிரித்துக் கொள்ளும் மனப்பான்மை இருந்தால், இந்த செயல்முறையும் எளிதாக முடியும். அனைத்து வாரிசுகளும் சொத்தை எப்படி பிரிப்பது என ஒருமனதாக முடிவு செய்தால் அதை சட்டபூர்வமாக அவர்களே பதிவு செய்யலாம்.

இந்தியாவின் 31 முதல்வர்களின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி? பணக்கார மற்றும் ஏழை முதல்-மந்திரி யார்?

சொத்தைப் பிரிக்கும்போது, அனைத்து வாரிசுகளும் 'தடையில்லா சான்றிதழ் (No Objection Certificate - NOC)' சமர்ப்பிக்க வேண்டும். அதாவது, இந்த சொத்தைப் பிரிப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், ஒரு பிரமாணப் பத்திரத்தையும் (Affidavit) பதிவு செய்ய வேண்டும். இந்த பிரமாணப் பத்திரத்தில், சொத்து பற்றிய விவரங்கள், வாரிசுகளின் பெயர்கள், அவர்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

பிற முக்கிய விஷயங்கள்: சொத்து பரிமாற்றத்திற்கு பிறகு மற்ற செயல்முறைகளையும் செய்வது கட்டாயமாகும். அதன்படி புதிய உரிமையாளரின் பெயர் வருவாய்த்துறை பதிவுகளில் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த செயல்முறைக்கான செலவு மாநிலங்களை பொறுத்து மாறுபடலாம். மேலும் சொத்தில் ஏற்கனவே வீட்டு கடன் இருந்தால் அல்லது குத்தகைக்கு விடப்பட்டிருந்தால் அதற்கேற்ப நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.

சொத்து பத்திரங்களை பத்திரமாகப் பாதுகாப்பது எப்படி?

பரம்பரை சொத்துரிமை தொடர்பான சிக்கல்களைத் தடுக்க சரியான ஆவணங்கள் மற்றும் சட்ட நடைமுறைகளை உடனடியாக முடித்து வைப்பது அவசியம். மேலே கூறப்பட்டுள்ள விவரங்களை சரியாக பின்பற்றுவதன் மூலம் மூதாதையர் சொத்து பரிமாற்றத்தை சமூகமாக செய்ய முடியும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online