Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வாட்ஸ்அப் பயன்படுத்த இனி காசு கட்டணுமா..?பதறாம இதை படிங்க!

வாட்ஸ்அப் பயன்படுத்த இனி காசு கட்டணுமா..?பதறாம இதை படிங்க!

Kalki Online 2 months ago

லகம் முழுக்க கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் தேவைகளை உணர்ந்து, பல்வேறு புதுப்புது வசதிகளை அவ்வப்போது கொண்டு வருகிறது வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா.

இதன்படி தற்போது வாட்ஸ்அப்பில் புதிதாக வாட்ஸ்அப் பிளஸ் என்ற சந்தா வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது மெட்டா நிறுவனம்.

யாரும் எதிர்பார்க்காத வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் சந்தா வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால், இதில் சந்தா செலுத்துபவர்கள் மற்ற பயனர்களைக் காட்டிலும் கூடுதலாக பல்வேறு வசதிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் வாட்ஸ்அப் மிகச் சிறந்த சாட்டிங் செயலியாக இருக்கிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அரட்டை என்ற செயலி பிரபலமானது. வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக கருதப்பட்ட அரட்டை செயலி, பிரபலமான ஒரு சில மாதங்களிலேயே பின்னடைவை சந்தித்தது. இதன் காரணமாக இந்தியாவில் வாட்ஸ்அப் செயலி மீண்டும் முன்னிலை பெற்றது.

பயனர்களின் தேவைகளைப் பொறுத்து, தொழில்நுட்ப உதவியுடன் வாட்ஸ்அப்பில் பல்வேறு அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தி வரும் மெட்டா நிறுவனம், தற்போது புதிய முயற்சியாக சந்தா செலுத்தும் வசதியைக் கொண்டு வந்துள்ளது.

இதன்படி மாதந்தோறும் ரூ.79 சந்தா செலுத்தினால் பல்வேறு பிரத்யேகமான வசதிகள் கிடைக்கும். அனைத்துப் பயனர்களும் சந்தா செலுத்த வேண்டியது கட்டாயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வசதிகள் வேண்டும் என நினைத்தால் சந்தா செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம்.

சந்தாவில் உள்ள புதிய வசதிகள்:

1. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரத்யேகமான ஸ்டிக்கர்களை அனுப்பலாம்.

2. வாட்ஸ்அப் செயலியின் தீம்-ஐ மாற்றிக் கொள்ளலாம்.

3. ஒவ்வொரு சாட்டுக்கும் தனித்தனியாக ரிங்டோனை அமைத்துக் கொள்ளலாம்.

4. சாட்டிங் பட்டியலை அப்கிரேட் செய்து கொள்ளலாம்.

5. விருப்பமான சாட்டுகளை அதிகளவில் பின் செய்து கொள்ளலாம்.

6. வாட்ஸ்அப் செயலிக்கு விருப்பமான ஐகானை தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது.

வாட்ஸ் அப்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை.! ஒரே ஒரு மெசேஜ் போதும்.!

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகி உள்ள இந்தப் புதிய வசதிகளை பயன்படுத்திக் கொள்ள மாதந்தோறும் ரூ.79 கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், எந்த அளவிற்கு பயனர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஏனெனில் இதற்கு முன்னர் அறிமுகமான பல வசதிகளுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் கட்டணம் வசூலிக்கவில்லை. இம்முறை சந்தா என்ற பெயரில் கட்டணம் வசூலிப்பதால், பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த சந்தா கட்டாயம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடடே! வாட்ஸ்அப்பில் மின் கட்டணமா: இது நல்லா இருக்கே!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online