Dailyhunt
வானில் மிதக்கும் ஒரு நகரம்! ஏர்பஸ் ஏ380-ன் வியக்கவைக்கும் ரகசியங்கள்!

வானில் மிதக்கும் ஒரு நகரம்! ஏர்பஸ் ஏ380-ன் வியக்கவைக்கும் ரகசியங்கள்!

Kalki Online 1 week ago

ர்பஸ் ஏ 380 போன்ற பிரம்மாண்டமான விமானங்கள் வெறும் பெரிய அளவிலானவை மட்டுமல்ல. பொறியியல் துறையில் உச்சகட்ட சாதனையாக கருதப்படுகின்றன.

அப்படி கருதப்படுவதன் காரணம், இந்த விமானத்தை முழுவதும் எக்கானமி (Economy class) கிளாஸாக மாற்றப்பட்டால் ஒரே நேரத்தில் 853 பயணிகள் வரை இதில் பயணிக்க முடியும்.

இதன் நீளம் சுமார் 238 அடி. சிறகுகளின் அகலம் 261 அடி. கிட்டத்தட்ட இது ஒரு கால்பந்து மைதானத்தின் அளவை ஒத்தது. உயரம் 79 அடி சுமார் 5 மாடி கட்டடத்தின் உயரம். இந்த விமானத்தின் மொத்த எடை சுமார் 5, 75,000கிலோ. எமிரேட்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் இப்போதும் இந்த விமானத்தை அதிக அளவில் இயக்கி வருகின்றன. 2026- ஆம் ஆண்டிலும் பல முன்னணி நகரங்களுக்கு இடையே இது இப்போதும் பயன்பாட்டில் உள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சில வியக்கத்தக்க தொழில் நுட்பங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

மேம்படுத்தப்பட்ட கலப்பு பொருட்கள் Advanced composites:

இந்த விமானத்தின் எடையை குறைக்க 'க்ளேர்' (Glare- Glass Laminate Aluminium Reinforced Epoxy) எனப்படும் ஒரு சிறப்பு பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அலுமினியம் மற்றும் கண்ணாடி இழைகளால் ஆனது. இது சாதாரண அலுமினியத்தை விட வலிமையானது. அதேசமயம் எடை குறைவானது. மேலும், இது துருப்பிடிக்காது மற்றும் தீ விபத்துகளின் போது அதிக பாதுகாப்பை வழங்கும்.

இறக்கைகளின் வடிவமைப்பு (Super-Efficient Wing Design) :

A380 -இன் இறக்கைகள் ஒரு சிறிய வீட்டை விட பெரியவை. இவை வானத்தில் பறக்கும் போது காற்றில் ஏற்படும் தடையைக் குறைக்க (Aerodynamics) நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இறக்கைகளின் நுனியில் உள்ள 'விங்லெட்ஸ்' (Winglets) எரிபொருள் சிக்கனத்திற்கு உதவுகின்றன. இந்த இறக்கைகள் சுமார் 5 ,60,000 கிலோ எடையைத் தாங்கும் அளவுக்கு வலிமையானவை.

அமைதியான மற்றும் சக்தி வாய்ந்த இயந்திரங்கள் (Quiet Engine Technology:

இதில் 4 எஞ்சின்கள் (Rolls-Royce Trent900 அல்லது (Engine Allaiance Gp7200) பயன்படுத்தப்படுகின்றன. இவை இவ்வளவு பெரிய விமானத்தை விண்ணில் உயர்த்தும் அளவுக்கு அதிக சக்தியை (Thrust) வழங்குகின்றன. அதேசமயம் மற்ற பெரிய விமானங்களை விட இந்த என்ஜின்கள் மிகக்குறைவான சத்தத்தையே எழுப்புகின்றன. இது விமான நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

மின்னல் முதல் ஹைட்ராக்சில் வரை: காடுகள் புவி வெப்பமாதலைத் தடுப்பது எப்படி?

மேம்படுத்தப்பட்ட ஏவியோனிக்ஸ் Advanced Avionics:

விமானி அருகே (Cockpit) காகித வரைபடங்களுக்கு பதில் முழுமையான டிஜிட்டல் திரைகள் உள்ளன.இதில் ஃப்ளை -பை -வயர் (Fly-by-Wire) தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது. அதாவது விமானி ஒரு கருவியை இயக்கினால் அது மின்சார சமிக்கைகளாக (Electricles Signals) மாறி கணினி மூலம் விமானத்தின் பாகங்களை கட்டுப்படுத்தும். இது மனிதத் தவறுகளை குறைத்து பாதுகாப்பை அதிகரிக்கிறது.

பிரேக்கிங் மற்றும் லேண்டிங் சிஸ்டம்:

இவ்வளவு பெரிய விமானம் தரையிறங்கும்போது அதன் வேகத்தை குறைக்க சக்கரங்களில் கார்பன் பிரேக்குகள் (Carbon Brakes) பொருத்தப்பட்டுள்ளன. இவை உராய்வினால் ஏற்படும் கடும் வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டவை. ஏ380- இல் மொத்தம் 22 சக்கரங்கள் உள்ளன. அவை விமானத்தின் எடையை சமமாக பகிர்ந்து கொள்கின்றன. தொழில்நுட்ப ரீதியாக இந்த விமானத்தை ஒரு "பறக்கும் நகரம்" என்றே சொல்லலாம் . அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது இந்த விமானமும் அதன் தொழில்நுட்பமும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online