Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வாஷிங் மெஷின் துர்நாற்றம், பூஞ்சை தவிர்க்க வேண்டுமா?  அவசியமான பராமரிப்பு வழிகாட்டி!

வாஷிங் மெஷின் துர்நாற்றம், பூஞ்சை தவிர்க்க வேண்டுமா? அவசியமான பராமரிப்பு வழிகாட்டி!

Kalki Online 3 months ago

ன்றைய வேகமான வாழ்க்கையில் வாஷிங் மெஷின் இல்லாத வீடு அரிது. தினமும் துணிகளை சுத்தம் செய்ய உதவும் இந்த மின் சாதனத்தை நாம் பெரும்பாலும் பராமரிக்க மறந்து விடுகிறோம்.

"சுத்தம் செய்யும் கருவிதானே!" என்ற எண்ணம் காரணமாக அதனை சுத்தப்படுத்துவது பலரின் கவனத்திற்கு வருவதில்லை. ஆனால் சரியான பராமரிப்பு இல்லையெனில் வாஷிங் மெஷினில் துர்நாற்றம், பூஞ்சை மற்றும் அழுக்கு தேங்கி, துணிகளை சரியாக சுத்தம் செய்யாத நிலை உருவாகலாம்.

ஏன் துர்நாற்றம் ஏற்படுகிறது?

கோடை மற்றும் மழைக்காலங்களில் வாஷிங் மெஷின் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வியர்வை படிந்த உடைகள், படுக்கை spreadகள் மற்றும் தினசரி துணிகள் ஆகியவற்றில் இருக்கும் ஈரப்பதம், மெஷினின் உள்ளே கிருமிகள் வளர ஏதுவாகிறது. குறிப்பாக சுத்தம் செய்யாமல் விட்டால் பூஞ்சை உருவாகி மோசமான நாற்றம் வீசத் தொடங்கும்.

டிடர்ஜென்ட் டிராயர் - கவனிக்க மறந்த பகுதி

வாஷிங் மெஷினில் அதிகமாக கவனிக்கப்படாத பகுதி டிடர்ஜென்ட் வைக்கும் டிராயர் ஆகும். சோப்பு மற்றும் லிக்விட் கழிவுகள் இங்கு படிந்து பூஞ்சை உருவாகும். இந்த டிராயரை வாரத்திற்கு ஒருமுறை எடுத்துச் சூடான நீரில் கழுவவேண்டும். அதேபோல் டிராயர் உள்ளே இருக்கும் பகுதியையும் துடைத்து சுத்தம் செய்தால் துர்நாற்றம் குறையும். இதனால் சோப்பு சரியாக கலந்தும் துணிகள் நன்றாக சுத்தமாகவும் இருக்கும்.

ரப்பர் சீலை சுத்தமாக வைத்தல்

வாஷிங் மெஷின் கதவின் ஓரத்தில் இருக்கும் ரப்பர் சீல் மிகவும் முக்கியமான பகுதி. ஒவ்வொரு முறை துணி துவைத்த பிறகும் இதில் நீர், தூசி மற்றும் துணி நார் தேங்கும். இதுவே பூஞ்சை உருவாக முக்கிய காரணமாகிறது.

ஒரு உலர்ந்த துணியால் ரப்பர் சீலை நன்றாக துடைத்து உலரவைக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை வெதுவெதுப்பான நீர் அல்லது வெள்ளை வெினிகர் பயன்படுத்தி சுத்தம் செய்தால் மெஷின் புதியதுபோல் இருக்கும்.

சிறிய பழக்கங்கள் - பெரிய பலன்

துணி துவைத்தவுடன் மெஷின் கதவை சில நேரம் திறந்து வைப்பது நல்லது. இதனால் உள்ளே இருக்கும் ஈரப்பதம் வெளியேறி துர்நாற்றம் உருவாகாது. மாதத்திற்கு ஒருமுறை காலியான மெஷினில் வெந்நீர் மற்றும் வெினிகர் சேர்த்து இயக்கினால் முழுமையான சுத்தம் கிடைக்கும்.

வாஷிங் மெஷின் ஓடும்போது ஷவரில் குளிக்கிற பழக்கம் இருக்கா.. உங்களை எச்சரிக்கும் பகீர் ரிப்போர்ட்!

வாஷிங் மெஷின் நம் வீட்டின் முக்கியமான அதிகத் தேவையான இயந்திரங்களில் ஒன்று அது இல்லாவிட்டால் அன்றாட வாழ்வில் சிக்கல் வந்துவிடும். நமக்கு வாஷிங் மெஷின் ஒரு அமைதியான உதவியாளர். அதை சுத்தமாக பராமரிப்பது நம் பொறுப்பு. டிடர்ஜென்ட் டிராயர் மற்றும் ரப்பர் சீல் போன்ற சிறிய பகுதிகளை அடிக்கடி சுத்தம் செய்தாலே துர்நாற்றம், பூஞ்சை போன்ற பிரச்னைகளை எளிதில் தவிர்க்கலாம். சுத்தமான மெஷின், சுத்தமான துணிகளையும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் தரும் என்பது மறுக்க முடியாத உண்மை.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online