Dailyhunt
வாழாமல் உழைப்பவரா நீங்கள்? ஓடி ஓடி சம்பாதிக்கும் முன் இதை ஒருமுறை படியுங்கள்!

வாழாமல் உழைப்பவரா நீங்கள்? ஓடி ஓடி சம்பாதிக்கும் முன் இதை ஒருமுறை படியுங்கள்!

Kalki Online 1 month ago

லர் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி பெற்று கடைசியில் உச்சம் தொடுகிறாா்கள். ஆனால், அவர்கள் வாழ்க்கையிலும் ஏதாவது பொிய காயங்கள் வெளியே தொியாமல் இருந்து வருவதும் இயல்பே!

அதேபோல சிலர் தடம் மாறிக்கொண்டே இருப்பாா்கள். அதுவும் அவர்களின் உந்து சக்தியை பாதிக்கும்!

ஆக இறைவன் ஆட்டுக்கு வாலை அளந்து வைத்திருப்பதுபோல ஒவ்வொருவருக்கும் ஒருவித சந்தோஷங்களையும், சங்கடங்களையும் கொடுத்துக்கொண்டே இருக்கிறாா். அவை அத்தனையையும் சமாளித்து எதிா்நீச்சல் போட்டு வாழந்துதான் ஆகவேண்டும்; அதுதான் நமக்கான வாழ்வின் பயணம் (Life Motivation).

பொதுவாக சிலருக்கு மனைவி அமைவதில்லை. அதேபோல கணவன் அமையாத நிலையும் சில இடங்களில் உண்டு.

வாாிசுகளால் மகிழ்ச்சி, அதேநேரம் வாாிசுகளால் சங்கடம் இப்படியான நிகழ்வுகள் தொடராமல் யாருக்குமே இங்கு வாழ்க்கை இல்லை. மொத்தத்தில் வருவது சிறிய வாய்ப்பானாலும் நழுவ விடக்கூடாது; காரணம் அதுவே பொிய வெற்றிக்கான முதல்படியாகும்.

இதை உணர்ந்தால்தான் நாம் வெற்றியாளராக முடியும். நிம்மதியான வாழ்க்கை என்பது ஓடி ஆடி வருவாய் ஈட்டி ஆடம்பரமாக வாழ்வதல்ல.

அதனில் இருப்பதை வைத்து நோய் நொடி இல்லாமல் வாழ்வதே வாழ்க்கை. ஆக இங்கே உழைக்காமல் வாழ்பவர்களைவிட, வாழாமல் உழைப்பவர்களே அதிகமாக இருக்கிறாா்கள். அந்த அளவிற்கு பல விஷயங்கள் வெளியில் தொிவதில்லை.

எது எப்படி இருந்தாலும் நல்ல எண்ணங்களுடன் விடாமுயற்சியை கைவிடாமல் வாழ்ந்து காட்டவேண்டும். காலம், நேரம் வெகு வேகமான நிலையில் சுற்றுகிறது. அதன் வேகத்திற்கு நாம் ஈடு கொடுத்தாக வேண்டும்.

கடைசி வரையில் பணமும், பந்தமும், நல்ல நட்பும் இருந்தால்தான் வாழ்க்கை இனிமையாக தொடரும்.

அதை தேடி அலைந்து நம்மிடையே தக்க வைத்துக்கொள்வதும், அதை தாங்கிப் பிடிப்பதும் நமது கையில்தான் உள்ளது. ஆக, நம்மையே நாம் வெல்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

மனசும் உடம்பும் ரொம்ப சோர்வா இருக்கா.. இந்த ரகசியங்களை ட்ரை பண்ணா நீங்களும் எனர்ஜெடிக் ஆகலாம்!

அதற்கு பயம் எனும் பெரிய மலையை, தன்னம்பிக்கை எனும் உளி கொண்டு உடைக்க தயாராகிவிடுவதே நல்ல அணுகுமுறை. முயற்சியை முழுமனதுடன் வரவேற்க தயாராகவேண்டும்.

அதனில் வேகத்தை விவேகத்துடன் அதிகமாக்கவும் வேண்டும். 'முயற்சியில் தவறு வரலாம்; முயற்சியே தவறாக மாறக்கூடாது' எனும் தாரக மந்திரத்தை கையில் எடுங்கள்.

தடைபல உடையுங்கள்; அதன்பிறகு போடுங்கள் ராஜநடை!

தான் என்ற தலைகனம் மறந்திடுங்கள்; அந்த நிலைபாட்டை புறந்தள்ளிவிடுங்கள். அதன்பிறகு நம்மை தேடி வருவதே வெற்றிமேல் வெற்றியாகும்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online