Dailyhunt
வெயிலில் அலைந்தாலும் முகம் பொலிவுடன் இருக்க... இதோ சில டிப்ஸ்!

வெயிலில் அலைந்தாலும் முகம் பொலிவுடன் இருக்க... இதோ சில டிப்ஸ்!

Kalki Online 3 weeks ago

பொதுவாகவே பலருக்கு நாம் அழகாக இருக்கவேண்டும், வயதானாலும் இளமை மாறாமல் இருக்கவேண்டும், வெயிலில் அலைந்துவிட்டு வந்தாலும் முகம் பொலிவுடன் இருக்கவேண்டும், என ஆசைப்படுவாா்கள்.

அதற்காக சிலர் பலவிதமான கிரீம், பேஸ்ட், அழகு சாதன களிம்புகளையும் போடுவது உண்டு. அதேபோல நம்மிடம் இருக்கும் இயற்கை வளங்களை வைத்தே முகத்தையும் உடலையும் வசீகரமாக வைத்துக்கொள்ளலாம்.

அவைகளில் சில…

காய்ச்சாத, தண்ணீா், கலவாத பசும்பாலை முகம் முழுவதுமாக லேசாக தடவி அரைமணிநேரம் குளிர்ந்த நீாில் அலம்பிவர முகம் பளபளப்பாக மாறும்.

கீரைவகைகள், கேரட், பீட்ரூட், தக்காளி, பழங்கள், திராட்சை காய்ந்தது, போன்ற உடலுக்கு ஏற்றுக் கொள்ளத்தக்க உணவு வகைகளை சாப்பிடுவதால் விட்டமின் குறைபாடுகள் குறையும்.

பாதாம் பருப்பினை ஊறவைத்து பாலுடன் குழைத்து முகத்தில் பூசிவரலாம்.

பனை நுங்கு வாங்கி அதில் உள்ள நீரை தடவி வந்தாலும் வியர்க்குரு குறைவதோடு முகமும் பளபளப்பாகமாற வாய்ப்புகள் உண்டு.

ஏதேனும் ஒருவகை வாழைப்பழத்தை மசித்து அதனுடன் பால், தேன், கலந்து பூசிவர முகம் பளபளப்பாகும்.

எலுமிச்சை சாற்றினை முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து வெது வெதுப்பான வெந்நீாில் முகம் கழுவவேண்டும்.

கடலை மாவு, பயத்தபருப்பு மாவு இவைகளுடன் தயிா்கலந்து முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் ஊறி பின்னர் முகம் கழுவ முகம் பளிச்சென மாறும்.

ஆரஞ்சுப்பழத்தோலை முகத்தில் நன்கு மிருவாக தேய்த்து, ஊறிய பின்னர் முகம் கழுவ முகத்தில் பொலிவு உண்டாகும்.

வெள்ளரிக்காயை தேய்த்துவர முகம் பளபளப்பாக மாறிவரும்.

பொதுவாகவே அடிக்கடி குளியல் சோப்பை மாற்றவே கூடாது, அதுவே சருமத்தில் பலவித குறைபாடுகளை உண்டாக்கும்.

பரு வந்தால் கிள்ளுவது நசுக்குவது போன்ற விஷயங்களில் கவனம் தேவை. கண்ட கண்ட முகப்பவுடா் பூசுவதே தவறுதான்.

அடர்த்தியான மற்றும் நீளமான கூந்தலுக்கு கேரட் தரும் மேஜிக்!

இப்படி நம்மை சுற்றியே இயற்கையோடு கலந்த பல உபயோகமான வகைகள் இருக்கும்போது, அதை நாம் பயன்படுத்த தவறிவிடுகிறோம்.

மொத்தத்தில் தொட்டதெற்கெல்லாம் கோபப்பட்டாலே முகத்தின் அழகு மெல்ல மெல்ல தேய்பிறையாகுமே! அதை வளா்பிறையாய் மாற்றுவது நமது குணநலன்களில் ஒன்றாகும்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online