Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விஜய் ஸ்கெட்ச்: பனையூரில் நடந்த ரகசிய ஆலோசனை - மாற்றுக் கட்சியிலிருந்து இணைந்தவர்களுக்கு என்ன பதவி?

விஜய் ஸ்கெட்ச்: பனையூரில் நடந்த ரகசிய ஆலோசனை - மாற்றுக் கட்சியிலிருந்து இணைந்தவர்களுக்கு என்ன பதவி?

Kalki Online 1 week ago

மாற்றுக் கட்சியில் இருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு இணைந்துள்ள கட்சி பிரமுகர்களை சந்திக்கவும் , அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய புதிய பதவிகள் பதவிகள் பற்றி ஆலோசனை செய்யவும் , முதல்வரும் , தவெகவின் தலைவரான விஜய் இன்று கட்சி தலைமை அலுவலகம் உள்ள பனையூருக்கு வருகை தந்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த பின்னர் , அதிமுக கட்சியில் இருந்து சாரை சாரையாக முன்னாள் அமைச்சர்கள் , தற்போதைய மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் என கூட்டம் கூட்டமாக வந்து தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்து வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரே அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வென்ற செங்கோட்டையன் , நிர்மல் குமார் , ஜே.சி.டி.பிரபாகர்(சபா நாயகர்), பஷீர் உள்ளிட்டோர்களுக்கு அமைச்சர் பதவிகள் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்தால் அரசியலில் நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக இருக்கின்றனர்.

மேலும் தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து படுதோல்வி அடைந்து வருவதாலும் , அந்த கட்சியின் எதிர்காலம் கருதி, ஏராளமானோர் தினம் தினம் தவெகவில் இணைய போட்டி போடுகின்றனர். கடந்த 30 நாட்களில் அதிமுகவிலிருந்து 4 சட்டமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் அமைச்சர்களான இரண்டு விஜய பாஸ்கர்கள் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வைகைச் செல்வன் , நடிகர் ரவி மரியா , புகழேந்தி , சத்தியபாமா திமுகவிலிருந்து வந்த நடிகர் பஷீர் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்துள்ளனர். அதில் பஷீர் திமுகவில் இருக்கும் முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தை, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் திமுகவிலிருந்தும் ஏராளமான ஒன்றியம் மற்றும் கிளை நிர்வாகிகள் தவெகவில் இணைந்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க வகையில் திமுகவின் முன்னாள் அமைச்சரான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி ஆகியோர் இன்று அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைந்தார்.

 actor Ravi mariya and Anandh

வழக்கமாக மாற்றுக் கட்சியில் இருந்து வரும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் , புதிய கட்சியின் தலைவரை சந்தித்து கட்சிகள் இணைவது தான் இதுவரை மரபாக இருந்து வந்துள்ளது. ஆனால் , இந்த நடைமுறை தவெகவில் இருப்பது இல்லை , தவெக கட்சியில் இணையும் பொழுது பெரும்பாலும் அந்த நிகழ்ச்சிக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா தலைமையில் தான் இணைந்து வருகின்றனர்.

இன்று இவர்களை சந்திக்க பட்டு வேட்டி , பட்டு சட்டை உடையில் பனையூர் அலுவலகத்திற்கு முதல்வர் வந்திருந்தார். ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தவெக பொதுச் செயலாளர் N. ஆனந்த் "தவெகவில் பதவி கிடைக்குமா? கிடைக்காதானு நினைக்காதீங்க. மிக விரைவில் உங்களுக்கு பதவிகள் வழங்கப்படும்"என்று மாற்றுக் கட்சியில் இருந்து இணைந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உறுதி அளித்தார்.

மாற்றுக் கட்சிகளில் இருந்து தவெகவில் இணைந்தவர்களை சந்தித்து பேசினார் விஜய். அதன் பின்னர் அவர்களுக்கு என்னென்ன பதவிகள் வழங்குவது? குறித்து முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையின் முடிந்த பின்னர் பனையூரில் இருந்து முதல்வர் விஜய் கிளம்பினார்.

இந்நிலையில் அமைச்சர் N. ஆனந்த் பேசுகையில், த.வெ.க-வில் பதவி கிடைக்குமா.. கிடைக்காதானு நினைக்காதீங்க.. உங்களுக்குண்டான பதவிகள் மிக விரைவில் வழங்கப்படும்" என உறுதியளித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online