Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விமர்சனம்: PATRIOT (2026) - மலையாளம் - சைபர் க்ரைம் ஸ்பை ஆக்சன் திரில்லர்!

விமர்சனம்: PATRIOT (2026) - மலையாளம் - சைபர் க்ரைம் ஸ்பை ஆக்சன் திரில்லர்!

Kalki Online 2 weeks ago

டெக்னிக்கலாகநம்ம ஊரில் ரஜினி + கமல் இணைந்து நடித்த படங்கள் 17. ஆனால் கேரளாவில் மம்முட்டி + மோகன்லால் இணைந்து நடித்த படங்கள் 50. கடைசியாக இருவரும் இணைந்து நடித்த படம் 2013ல் வெளியான கடல் கடன்னு ஒரு மாதுக்குட்டி.

13 வருடங்களுக்குப்பின் இருவரும் இணைந்து நடித்த படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆகி இருக்கிறது PATRIOT. இது இருவரும் இணைந்து நடித்த 51 வது படம். 140 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான பிரம்மாண்டமான படம் PATRIOT.

இயக்குநர் மகேஷ் நாராயணன் எடிட்டர் ஆக 2007ல் ராத்திரி மழ படத்தில் அறிமுகம் ஆனாலும் இயக்குநர் ஆக 10 வருடங்கள் கழித்து டேக் ஆப் என்ற படத்தில் 2017ல் களம் இறங்கியவர். சீயூசூன் (2020), மாலிக் (2021) அறியிப்பு (2022), மனோரதங்கள் (2024) என 5 படங்கள் இயக்கி இருக்கிறார். அனைத்தும் வெற்றிப்படங்கள். டெக்னிக்கலாக சிறந்த படங்கள்.

இப்பேர்ப்பட்ட இயக்குநருடன் மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால், பகத்பாசில், குஞ்சக்கா போபன், நயன்தாரா, ரேவதி எனப்பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்த படம் PATRIOT. பிரம்மாண்டமான இந்தப் படம் எப்படி உருவாகி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

ஸ்பாய்லர் அலெர்ட்

தமிழக அரசியலில் சமீபத்தில் சொந்த மகனே அப்பா வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவியைப்பொருத்தி உளவு பார்த்த விஷயம் அனைவரும் அறிந்ததே. 2022ல் இந்திய அரசியலில் ஒட்டுக்கேட்ட விவகாரம் பேசு பொருள் ஆனது. இந்த ஒட்டுக்கேட்கும் விவகாரம் தான் கதைக்கரு.

வில்லன் ஒரு சாப்ட்வேர் கம்பெனி வைத்திருக்கிறான். Lik படத்தின் வில்லன் லவ் ஆப் உருவாக்கியது போல இந்த வில்லன் ஒரு ஆப் கண்டுபிடிக்கிறான். செல்போன், லேப்டாப்பில் ஒருவர் இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து விட்டால் அவரது ரகசியங்கள் அனைத்தையும் எடுத்து விடலாம்.

வில்லனின் அப்பா ஆளும் கட்சி அமைச்சர். அவர் சட்டத்துக்குப்புறம்பாக இந்த ஆப்பை சாங்க்சன் செய்கிறார். ஏன் எனில் இது போன்ற பெரிஸ்கோப் ஸ்பைவேர் இராணுவத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும்.

அரசாங்கம் ஏழை மக்களுக்கு இலவச லேப் டாப் வழங்குவது போல இந்த ஆப்பையும் இன்ஸ்டால் செய்தே வினியோகம் செய்கிறது. இந்த ஆப்பால் சாமானிய மக்கள் பலி ஆகிறார்கள்.

சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றும் ஒரு பெண் ஊழியர், இந்த ஆப் பற்றி அறிந்த நேர்மையான இன்னொரு பெண் அமைச்சர் இருவரும் மர்மமான முறையில் மரணிக்கிறார்கள்.

இப்போது தான் நாயகனின் எண்ட்ரி. டிபன்ஸ் டிபார்ட்மெண்ட்டில் ஹையர் ஆபீசர் ஆகப்பணி ஆற்றுகிறார்.

வில்லனின் ஆப் பற்றிய தில்லு முல்லுகள், வில்லனால் இறந்த முக்கியப்புள்ளிகளின் மர்ம மரணங்கள் இவற்றைக் கண்டறிய களம் இறங்குகிறார்.

வில்லனின் அப்பா ஒரு ஆளும் கட்சி அமைச்சர் என்பதால் நாயகனுக்கு இடையூறுகள் தருகிறார். இதை மீறி நாயகன் எப்படி ஜெயிக்கிறான் என்பதே மீதித் திரைக்கதை.

நாயகன் ஆக மம்முட்டி கம்பீரமாக நடித்திருக்கிறார். 70 வயது முதுமை தெரியாமல் இருக்க தாடி கெட்டப் போல. அதையும் மீறி வயோதிகம் தெரிகிறது. ஆனால் அவரது கணீர் குரல், உடல் மொழி பிரமாதம். அவர் பேசும் பஞ்ச் ஒன்லைனர்களுக்கு தியேட்டரில் கை தட்டல்.

வில்லனாக கார்ப்பரேட் கலக்கல் பகத் பாசில் வழக்கம் போல் அனாயசமான நடிப்பு.

மோகன்லால் இடைவேளைக்குப் பின்னால் தான் வருகிறார். ஆனால் அவர் வரும் காட்சிகள் எல்லாம் அதகளம்.

வில்லனின் அப்பாவாக அமைச்சர் ரோலில் ராஜீவ் மேனன் கச்சிதம்.

நேர்மையான அமைச்சர் ஆக நடிகை ரேவதி நரை முடியில் ஓல்டு கெட்டப்பில் வருகிறார். மண் வாசனை ரேவதியா இவர்? என வியக்க வைக்கிறார்.

குஞ்சக்கா போபன். நயன்தாரா, தர்சனா ராஜேந்திரன், இந்திரன்ஸ், கிரேஸ் ஆண்ட்டனி என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது. அனைவரும் அவரவர் ரோலை சரியாக செய்து இருக்கிறார்கள்.

சுசின் ஷ்யாம் இசை பரவாயில்லை ரகம் தான். பின்னணி இசை நல்ல விறுவிறுப்பு.

மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு பிரம்மாண்டம். ஹாலிவுட் தரத்தில் காட்சிகள் கண் முன் விரிகின்றன.

ராகுல் ராதாகிருஷ்ணன், இயக்குநர் மகேஷ் நாராயணன் இருவரும் இணைந்து எடிட்டிங்க் செய்து இருக்கிறார்கள். 3 மணி நேரம் படம் ஓடுகிறது.

முதல் பாதி நல்ல வேகம், பின் பாதி இன்னமும் ஷார்ப் ஆக ட்ரிம் பண்ணி இருக்கலாம்.

கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் மகேஷ் நாராயணன்.

விமர்சனம்: ஓ பட்டர்பிளை (2026) - தமிழ் - ரொமாண்டிக் சைக்காலஜிக்கல் திரில்லர்!

சபாஷ் டைரக்டர்

  • சாமானியனுக்கும் புரியும் வகையில் முதல் காட்சியில் இருந்தே பெரிஸ்கோப் ஸ்பை வேர் ஆப் பற்றி விளக்கி கதைக்குள் ஆடியன்சை இழுத்த விதம் அருமை.

  • தேசபக்திப் படம் என்றாலும் துரந்தர் மாதிரி ஜல்லி அடிக்காமல் ஆதார் கார்டு, பாகிஸ்தான் பிரச்சனை போன்றவற்றை பொலிடிக்கல் சட்டயர் ஆக கிண்டல் செய்த விதம் அருமை.

  • காருக்குள் நடக்கும் சண்டைக்காட்சியில் கேமரா 360 டிகிரியில் சுழன்று படம் பிடித்த விதம் அட்டகாசம், எடிட்டிங்கும் அந்த சீனில் செம.

  • வில்லன் ஜெட்டில் மாட்டிக்கொள்ள நாயகன் கீழே இருந்தபடி வில்லனை வழி நடத்திக் காப்பாற்றும் காட்சி தியேட்டரில் அப்ளாஸ் அள்ளியது.

  • மோகன் லால் வரும் காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் அளவு அசத்தல் ரகம்.

லாஜிக் மிஸ்டேக்ஸ்

  • மெயின் ஹீரோவுக்கே டூயட் இல்லாதபோது தர்சனா ராஜேந்திரன் பாடல் காட்சி தேவை இல்லாதது. ஆக்சன் படத்தில் ஒட்டவில்லை. மெயின் கதைக்கும் இவரது பிளாஸ்பேக் கதைக்கும் சம்பந்தம் இல்லை.

  • மம்முட்டி, மோகன் லால் காம்போ சீன்கள் பெரிய மேஜிக் எதையும் நிகழ்த்தாதது ஏமாற்றம். திரைக்கதை எழுதியவர் இந்த முக்கிய விஷயத்தில் கோட்டை விட்டு விட்டார்.

விமர்சனம்: The Man In The Window (2026) - ஆங்கிலம் - மிஸ்ட்ரி க்ரைம் திரில்லர்!
  • க்ளைமாக்சில் நாயகன், வில்லன் ஒன் டூ ஒன் பைட் சீன் எல்லாம் தேவையே இல்லை.

  • படத்தின் நீளம் சோதிக்கிறது. யப்பா, சீக்கிரம் முடிங்கப்பா என சொல்லத் தோன்றுகிறது

  • படத்தில் எதிர் பாராத ட்விஸ்ட் எதுவும் இல்லை. பிளாட்டாக செல்கிறது. நயன்தாரா கேரக்டர் கூட வலுக்கட்டாயமாக ஒரு பெரிய ஸ்டார் இருக்கட்டுமே என்று புக் செய்த மாதிரி தெரிகிறது.

  • Enemy of the state (1998), ப்ருஸ் வில்ஸ் நடித்த Red (2010) போன்ற ஹாலிவுட் படங்களில் இருந்து சில ஆக்சன் சிக்வென்ஸ் சுட்டிருக்கிறார்கள்.

  • ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வரும் புகழ் பெற்ற BGMமை அப்படியே பயன்படுத்தி இருக்கிறார்கள்.

  • சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன், தனி ஒருவன், லூசிபர், கவண், இரும்புத்திரை உட்பட பல தமிழ்ப்படங்களில் வரும் ஒரு சில சீன்களை இதிலும் வைத்திருக்கிறார்கள்.

  • பின்பாதியில் மோகன் லால் வருகைக்குப்பின் மம்முட்டி, மோகன்லால் இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொள்வது மெயின் கதைக்குத்தேவை இல்லாத பில்டப் காட்சிகளே!

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U

சிபிஎஸ் பைனல் கமெண்ட்: கேரளா ரசிகர்கள் படத்தைக் கொண்டாடுவார்கள். தமிழ் ஆடியன்சுக்கு சராசரியான ஒரு ஆக்சன் திரில்லர் தான், பார்க்கலாம். ஆங்கில சப் டைட்டில் உண்டு.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online