Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வியப்பூட்டும் வகையில் கூடுகள் கட்டி அசத்தும் தூக்கணாங்குருவிகள்!

வியப்பூட்டும் வகையில் கூடுகள் கட்டி அசத்தும் தூக்கணாங்குருவிகள்!

Kalki Online 1 year ago
 Baya weaver Birds

ஆழ்ந்த அறிவு, பொறுமை, உறுதியான உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்ற குணங்களை கொண்டவை தூக்கணாங்குருவிகள்.

 Baya weaver Birds

ஊர்க்குருவி வம்சத்தை சார்ந்தவை. அளவிலும், உடலமைப்பிலும் ஊர்க் குருவி போல் இருக்கும்.

 Baya weaver Birds

தலை, மார்பு ஆகியவை மஞ்சள் வண்ணம் கொண்டு இருக்கும். இவை பொதுவாக 15 செமீ வளரக் கூடியவை.

 Baya weaver Birds

சராசரி எடை 20 கிராம். புல், அரிசி, கோதுமை, சோளம், தினை ஆகிய தானியங்களை உண்ணும்.

 Baya weaver Birds

வெட்டுக் கிளி, ஈக்கள், கரையான், கம்பளிப் பூச்சி, சிலந்தி, வண்டுகள், நத்தை, தவளை இவற்றையும் உணவாக உட்கொள்ளும்.

 Baya weaver Birds

பொதுவாக வயல்வெளிகளில் திரளாக கூடி வாழும். கூடு கட்டி குஞ்சுகள் பொரிக்காத பொழுது நீர் ஆதாரங்கள் உள்ள அடை விடங்களில் கூடி இரவைக் கழிக்கும்.

 Baya weaver Birds

தூக்கணாங்குருவிகள் ஈச்ச மரம், கருவேலமரம், பனை மரம், இலந்தை மரம் இவற்றில் கூடுக்கட்டும்.

 Baya weaver Birds

கூடுகள் சுரைக்காய் வடிவம் போல் இருக்கும். கூடுகள் நார்களில் பின்னிய தடிப்பக்கங்களுடன் இருக்கும். கூடுகளின் வளைகளுள் தளம் அமைத்து அதில் முட்டையிடும்.

 Baya weaver Birds

இத்தள பக்கங்களில் களிமண்ணை அப்பி அவற்றில் மின்மினி பூச்சிகளை ஒட்டி ஒளி வசதி ஏற்படுத்தும்.

 Baya weaver Birds

இக்கூடுகள் கட்ட தேவையானவற்றை கொண்டு வர ஆயிரம் முறைகளுக்கு மேல் பறந்து செல்கின்றன இந்த குருவிகள்.

 Baya weaver Birds

கூடுகள் கட்ட வைக்கோல், நீளமான புற்கள், தென்னை நார்கள், ஈரக் களிமண், மாட்டுச்சாணம் , மின் மினிப் பூச்சிகள் ஆகிய பொருட்களை பயன் படுத்துகின்றன.

 Baya weaver Birds

ஆண் குருவிகளே மூன்று வாரங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டு கட்டி முடிக்கின்றன. கூடுகள் தலை கீழாக தொங்கும் தோற்றத்தை ஏற்படுத்தும்.

 Baya weaver Birds

பறவைகள் அமர்வதற்கு குறுக்குச் சட்டகம், முட்டைகள் இடுவதற்கு தனிப் பகுதி இவை இருக்கும்.

 Baya weaver Birds

கூடுகள் கட்டியதும் பெண் குருவிகளுக்கு முழு திருப்தி உள்ளதா என்பதை ஆண் குருவி உறுதி செய்து கொள்ளும்.

 Baya weaver Birds

பெண் பறவை 3 அல்லது 4 முட்டைகள் இடும். பெண் பறவை 15 நாட்கள் வரையில் அடை காக்கும்.

 Sukku Malli Coffeeதினமும் சுக்கு மல்லி காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online