Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
யோகம் தரும் ஏலக்காய் மற்றும் கிராம்பு மாலை!

யோகம் தரும் ஏலக்காய் மற்றும் கிராம்பு மாலை!

Kalki Online 4 months ago

வாழ்க்கையில் பலபேருக்கு சில காரியத்தை செய்வதற்கு தடங்கல் வந்துகொண்டே இருக்கும். அப்போது அவர்களுடைய மனம் தானாகவே புலம்ப ஆரம்பித்து, உடலில் சோர்வையும், செயல்படுவதில் மந்தம் ஏற்பட்டு, நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று விரக்தி அடைந்து விடுவார்கள்.

அதனை போக்குவது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

வீட்டில் நாம் பயன்படுத்தும் ஏலக்காய் மற்றும் கிராம்பு போன்றவை சாதாரணமான பொருட்கள் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். அவற்றில் மூலிகைத்தன்மை இருப்பது எல்லோருக்கும் தெரியும். இவைகள் இரண்டும் மகாலட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த பொருட்கள் ஆகும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இவைகள் இரண்டையும் வைத்துக்கொண்டு, வீட்டுக்கு யோகமும், அதன் வழியில் செல்வம் வருவதும் எப்படி என்பதை கீழே பார்ப்போம்.

சிலருக்கு, அவனுக்கு மட்டும் எப்படி செல்லம் வந்து குவிகிறது, நமக்கு அது மாதிரி இல்லையே என்று ஆதங்கப்படுவது உண்டு. பலருக்கும் தன்வீட்டில் செல்லம் கிடைக்கும் அருள் இல்லையே என்று புலம்புவதும் உண்டு. இதற்கு காரணம், அந்த வீடுகளில் லட்சுமி தேவி வாசம் செய்வதில்லை என்பதுதான் உண்மை. சிலருக்கு பணம் மழையாக கொட்டும்.

ஆனால் எப்படி கரைந்து போகிறது என்பது உணரும்போது, மனம் சஞ்சலம் அடையும். அடிக்கடி மருத்துவ செலவுகள், வாகனம் பழுதாகும் செலவுகள் மற்றும் எதிர்பாராத செலவுகள் வந்து, வாட்டி வதைத்து, இருப்பை கரைத்துகொண்டு போகும். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டவே இந்த பதிவில் தீர்வை எட்டுவோம்.

அம்மனுக்கு உகந்த கிழமையான வெள்ளிக்கிழமை அன்று, நித்தியபடி பூஜையை செய்துவிட்டு, ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஒன்றை எடுத்து, பூஜை அறையில் தனியே வைத்து, விளக்குக்கு மங்களகரமான மஞ்சள், குங்குமம் போன்றவற்றை இட்டு, குத்து விளக்கு பாதத்தை மல்லிகை மலர்கள் சேர்த்து, சுற்றி அலங்காரம் செய்யவும். பிறகு 108 எண்ணிக்கையில் எலக்காயை ஒன்றன்பின் ஒன்றாய் தொடுக்கவும்.

ஹம்பியில் உள்ள ஊசி துவார கேமரா அமைப்புள்ள விருபாக்ஷர் ஆலய அதிசயம்!

கிராம்பை நூலில் ஒன்றன் பின் ஒன்றாக மாலையாக தொடுக்கவும். பிறகு காய்ந்த திராட்சை முத்துக்கள், மாதுளம் பழம் ஒன்று மற்றும் நெல்லிக்கனி ஐந்து சேர்த்து ஒரு தட்டில் வைத்து, விளக்கின் முகப்பில்வைக்கவும். இன்னொரு தட்டில் வெற்றிலை பாக்கு மற்றும் வாழைப்பழம் வைத்து, அதன்மீது காணிக்கையாக ஐம்பத்திஒன்று அல்லது நூற்றி ஒன்று பணத்தை வைக்கவும்.

பிறகு இரண்டு மாலைகளை குத்து விளக்கின் மீது மாலையாக போட்டு விட்டு, மகாலட்சுமி ஸ்லோகம் சொல்லிக்கொண்டே விளக்கின் ஐந்து முகங்களிலும் தீபம் ஏற்றவும். (தீபம் ஏற்றும் நேரம் காலை 6-7 மணிக்கு, அல்லது மதியம் 1-2 மணிக்கு அல்லது இரவு 8-9 மணிக்கு) இவற்றில் எதாவது ஒரு நேரத்தில் செய்யலாம்.

தொடர்ந்து 21 வாரங்கள் இவற்றை பக்தியோடு செய்து வந்தால், குபேர யோகத்தை அடையாளம் என்று சாஸ்திரம் சொல்கிறது. இப்படி செய்வதால் மகாலட்சுயின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். ஏலக்காய் மற்றும் கிராம்பு மாலைகள் நிறம் மாறினாலோ அல்லது மணம் குறைந்தாலோ வேறு மாலை செய்து போடலாம். இப்படி செய்ய முடியாதவர்கள் நிறைஞ்ச பெளர்ணமி அன்று செய்யலாம். தட்டில் வைக்கும் பணத்தை கோவில் உண்டியலில் சேர்த்துவிடுவது நல்லது.

மரண தண்டனையைவிடக் கொடுமையான தண்டனை எது?

இப்படி செய்யும்போது மகாலட்சுமி தங்கள் வீடுகளில் வாசம் செய்வதோடு, யோகத்தையும், செல்வத்தையும் மற்றும் மன அமைதியையும் வாரி வழங்குவாள். இந்த முறையை நம்பிக்கையோடு செய்து, வாழ்க்கையில் நல்ல பலன்களை அடையுங்கள். நம்பினார் கெடுவது இல்லை.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online