Sunday, 09 Aug, 8.58 am Kathir News

இந்தியா
அன்னிய செலாவணி கையிருப்பு அடுத்த 13 மாத இறக்குமதிக்கு போதுமானது : இது வரலாறு காணாத சாதனை என்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர்.!

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு சென்ற ஜூலையுடன் நிறைவடைந்த ஒரு வாரத்தில் 53, 457 கோடி டாலராக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இது குறித்து தனது அறிக்கையில் கூறுகையில் " கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்த வாரத்தின் அந்நிய செலாவணி கையிருப்பு 1194 கோடி அதிகரித்து

53457 கோடி டாலராக புதிய சாதனை அளவில் தொட்டுள்ளது. இதற்கு முந்தைய ஜூலை 24 ந்தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி இருப்பு 499 கோடி டாலர் உயர்ந்து 52,263 டாலராக காணப்பட்டது.

இந்திய அந்நிய செலாவணி கையிருப்பானது ஜூன் - 5 ந்தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் முதன்முறையாக அரை ட்ரில்லியன் டாலர் என்ற மயில் கல்லை தாண்டி சாதனை படைத்திருந்தது. அந்நிய செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ள அந்நிய செலாவணி சொத்து மதிப்பு ஜூலை மாதத்துடன் நிறைவடைந்திருந்த வாரத்தில் 49,083 கோடி டாலராக இருந்தது. மேலும் தங்கத்தின் கையிருப்பு மதிப்பும் 152 கோடி டாலர் அதிகரித்து 3762 கோடி டாலரானது.

அந்நிய செலாவணி கையிருப்பு குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் கூறுகையில் " தற்போது அந்நிய செலாவணி கையிருப்பு 53,460

கோடி டாலர்களாக உள்ளது. இது இந்தியா அடுத்த 13.4 மாதங்கள் வரை இறக்குமதி செய்வதற்கு போதுமான அளவாகும் என்றார். மேலும் நடப்பு 2020 - 21 நிதியாண்டில் இது வரையில் அந்நிய செலாவணி கையிருப்பானது 5,680 கோடி டாலர் அளவுக்கு அதிகரிப்பை முதன்முறையாக கண்டுள்ளது என்றார்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Kathir News
Top