தமிழ் நாடு
"குரங்கு தன் குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல ஸ்டாலின் உதயநிதியை விட்டு அரசியல் ஆழம் பார்க்கிறார்" - செல்லூர் ராஜு.!

தமிழக அரசியலில் தி.மு.க இன்று தனித்துவமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது அதன் போக்கை கண்டு தி.மு.க'வினரே "இது சரியான பாதை அல்ல" என பரிதவித்து வருகின்றனர். இந்த நிலையில் கருணாநிதி'யின் மூத்த மகனும் தற்போதைய தி.மு.க தலைவர் ஸ்டாலினின் அண்ணனுமாகிய மு.க.அழகிரி, "அப்பா வளர்த்த கட்சி இப்படி ஆகிவிட்டதே" என மனம் வெதும்பி புலம்பி வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜி தெரிவித்துள்ளார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு மதுரையில் செய்தியாளர்களிடம பேசும்போது, "முதல்வரின் தீர்க்கமான நடவடிக்கையால் நிவர் புயல், பாதிப்பை ஏற்படுத்ததாமல் சென்றுள்ளது. விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காக்கப்பட்டுள்ளது. புயலை பொருட்படுத்தாமல் குடையை பிடித்து கொண்டு முதல்வர் நேரில் ஆய்வு செய்தார். முதல்வரின் நடவடிக்கையால் வீடியோ கான்பிரன்ஸில் இருந்த ஸ்டாலின் நேரில் ஆய்வுக்கு வந்தார். புயலை வைத்து தி.மு.க விளம்பரம் தேடி வருகிறது" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் எதை வைத்து பிரசாரம் செய்வார் என தெரியவில்லை, குரங்கு தன் குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல ஸ்டாலின் உதயநிதியை விட்டு அரசியல் ஆழம் பார்க்கிறார்,
தி.மு.க-வில் உதயநிதி கட்டாயமாக திணிக்கப்படுகிறார். தி.மு.க நாடக கோஷ்டி போல ஆகி விட்டது. தமிழக மக்கள் போலியை நம்பி வாக்களிக்க மாட்டார்கள். தி.மு.க ஆட்சி காலத்தில் வந்த புயலின் போது செய்த உதவிகளை ஸ்டாலின் எண்ணி பார்க்க வேண்டும். அண்ணா தொடங்கிய தி.மு.க குடும்ப கட்சியாக மாறி உள்ளது. நாலு வரியை பார்த்து படிக்க தெரியாதவர் ஸ்டாலின். கலைஞரின் மூளை ஸ்டாலினினுக்கு இல்லை, மு.க.அழகிரியிடம் உள்ளது. அப்பா வளர்த்த கட்சி இப்படி அகிவிட்டதே என்று மு.க.அழகிரி மனம் வெதும்பி உள்ளார்" என அதிரடியாக கூறியுள்ளார்.