மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் அவர்கள் தயாரிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் 'துரோகம் பழகு'.
இத்திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
சினிமாவில் பொதுநலன் சார்ந்த கருத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் நாயகன் தக்க்ஷன் விஜய் அவர்களையும் முதலமைச்சர் அவர்கள் பாராட்டினார். மேலும், திரைப்படத்தின் ரஃப் கட் காட்சிகளைப் பார்வையிட்ட முதலமைச்சர் அவர்கள், படக்குழுவினரின் பணியை வெகுவாகப் பாராட்டியதோடு, திரைப்படத்தின் முழுக் குழுவினரின் கடின உழைப்பிற்கும் தனது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்தார்.

