Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
என்ன விலை- விமர்சனம்

என்ன விலை- விமர்சனம்

Kollywood Voice 5 days ago

றத்தையும் அதன் விழுமியங்களையும் உரக்கப் பேச முயன்றிருக்கிறது என்ன விலை

ஹீரோ கருணாஸ் கடலில் வீசப்படும் திதி சில்லறைகளை எடுத்து வாழும் அளவிற்கு வறுமைக்காரர்.

ஒருநாள் அவருக்கு பெரும் தங்கம் கிடைக்கிறது. ஆனால் அதை அவர் தன் வறுமைக்கு பயன்படுத்தாமல் போலீஸ்டேசனில் ஒப்படைக்கிறார். அது அவருக்கே ஆபத்தாக மாறுகிறது. அதிகாரம் எளியவர்களை ஆடும் வேட்டையிலிருந்து கருணாஸ் எப்படித் தப்பித்தார்? என்பதே கதை

நல்ல நடிகர் என்ற பெயரை எப்பவோ பெற்ற கருணாஸ் இப்படத்திலும் அந்தப்பெயரை தக்க வைக்கிறார். நிமிஷா சஜயன் தனக்கு வழங்கப்பட்ட கேரக்டரின் பொறுப்புணர்ந்து நடித்துள்ளார். விஜயலட்சுமி வீரமணி, கமலேஷ் ஜெகன், ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமணி பாக்கியராஜ் உள்ளிட்ட எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்

இந்தப்படத்தின் முக்கியமான ஆச்சர்யம் சாம்.சி.எஸ் கொடுத்துள்ள பின்னணி இசை. இப்படியான மென் உணர்வுப் படங்களுக்கும் தன்னால் இசைக்க முடியும் என நிரூபித்துள்ளார். ஒளிப்பதிவாளர் ஆல்.பி ஆண்டனி தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள்ளார்

இயக்குநர் சஜீவ் பழூர் தனது நேர்த்தியான இயக்கத்தைச் சிறப்பாகச் செய்துள்ளார். நிறைய காட்சிகளில் ஆர்கானிக் இருந்தாலும் ஒருசில காட்சிகள் ஓவர் டோஸாகவும் மாறியுள்ளது. இருப்பினும் படம் சொல்லும் நல்ல மெசேஜுக்காக நாம் நல்ல விலை கொடுக்கலாம்
3.25/5
-வெண்பா தமிழ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kollywood Voice