Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Hi- விமர்சனம்

Hi- விமர்சனம்

Kollywood Voice 3 weeks ago

கூடுமான வரைக்கும் லாஜிக் பார்க்க வேண்டாம் என்ற டிஸ்க்ளைமர் இப்படத்திற்கு கட்டாயம்! எதுக்காகச் சொல்றோம்னா..அதுக்காகச் சொல்றோம்

ஒரு காதலும் கை கூடாத கவின் தானொரு காதலியைப் பிடித்தே தீருவேன் என்று ஊரைவிட்டு ஓடி வருகிறார். வீட்டில் நடத்தப்படும் தனது திருமணம் பிடிக்காமல் நயன்தாராவும் ஓடி வருகிறார். சென்னைக்கு வரும் இருவரும் சந்திக்க நேர்கிறது. பழக நேர்கிறது. அந்தப்பழக்கத்தை காதலாக்க முயல்கிறார் கவின். அது நடந்ததா என்பது க்ளைமாக்ஸ்

கவின் அழகாக இந்த கேரக்டரை பேலன்ஸ் செய்துள்ளார். நயன்தாராவை அவர் மிரட்சியோடே அணுகுவது மட்டும் மைனஸ். அதனாலே இருவருக்குள்ளும் கெமிஸ்ட்ரி வொர்க் ஆகவில்லை. நயன்தாரா ஆல்ரெடி பத்தாண்டுகளுக்கு முன்பே இப்படியான கேரக்டர்களில் அசத்தியவர்! ஆனால் இந்தக்கதைக்கு அவர் செட் ஆகவில்லை என்பதே நிஜம். ராதிகா சரத்குமார் திறமை வீணடிக்கப்பட்டுள்ளது. தெய்வத்திரு பாக்கியராஜ் அசத்தியுள்ளார். பிரபு, சுஹாசினி காம்போ பெரிதாக வொர்க் ஆகவில்லை. ஆதித்யா கதிர் காமெடி ஆங்காங்கே ஆறுதல். சத்யன் கேரக்டரும் ஒகே

ராஜேஷ் சுக்லாவின் ஒளிப்பதிவில் எதார்த்தம் மின்னுகிறது. ஜென் மார்ட்டின் பின்னணி இசையில் நல்ல Feel கொடுத்துள்ளார். பாடல்களில் இன்னுமே வைப் ஏற்றியிருக்கலாம்

இதுதான் படத்தின் முடிவு என்பதை நாம் படம் ஆரம்பிக்கும் போதே கண்டுபிடித்து விடும் அளவிற்கு பழைய திரைக்கதை. ஆனால் சில இன்ட்ரஸ்டிங்கான காட்சிகளை வைத்து ஒப்பேற்றியுள்ளார் இயக்குநர் விஷ்ணு எடவன். படத்தின் லீட் கேரக்டர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஸ்ட்ராங்கான காரணங்கள் இல்லாததும் மைனஸ் ! சிலபல காமெடி காட்சிகளுக்காக ஒருமுறை பார்க்கலாம்
2.75/5

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kollywood Voice