Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கருப்பு- விமர்சனம்

கருப்பு- விமர்சனம்

Kollywood Voice 1 week ago

சூர்யாவை இந்த கருப்பு சாமியாவாது காப்பாற்றியுள்ளாரா?

கோர்ட்டில் வக்கீல்கள் வழியாக எளிய மக்களுக்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்க கருப்ப சாமி அவதாரமாக வருகிறார் சூர்யா.

பலருக்கு கேடுகளை விளைவித்து வரும் வக்கீல் ஆர்.ஜே பாலாஜி கருப்பு சாமியை எப்படி எதிர்கொண்டார் என்பதும், சாமி எப்படி அவருக்கு ஆப்படித்தது என்பதுமே படத்தின் கதை. (படத்தின் முன்பாதியில் நடிகர் இந்திரன்ஸ் போர்சனை மட்டுமே வைத்து முழுக்கதையும் பண்ணியிருக்கலாம் பச்)

தான் ஏற்கும் வேடம் எதுவாக இருந்தாலும் அதற்கு தன்னை முழுமையாக ஒப்பட்டைக்கும் ஹீரோக்களில் முக்கியமான ஒருவர் சூர்யா. இந்தப்படத்திலும் அசுர உழைப்பைக் கொடுத்துள்ளார். சண்டைக்காட்சிகளில் மனிதர் சிங்கமே தான். திரிஷா படத்தில் திருஷ்டிப்பொட்டு ரேஞ்சில் தான் வருகிறார். ஆர்.ஜே பாலாஜி சூர்யாவை விட அதிகநேரத்தை திரையில் எடுத்துக்கொள்கிறார். நிச்சயமாக இது ஏற்கத்தக்கதல்ல. இந்திரன்ஸ் வரும் எல்லா காட்சிகளும் நம் இதயம் உடைகிறது. அப்படியொரு நடிப்பை அவர் வழங்கியுள்ளார். அவரின் மகளாக நடித்தவரும் சூப்பர் நடிப்பைக் கொடுத்துள்ளார். நட்டி கேரக்டரும் நடிப்பும் ஜஸ்ட் ஒகே!

சாய் அபயங்கர் இரைச்சலைக் குறைத்து வாசித்துள்ளதே ஆறுதல்! பாடல்களில் அவர் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். GK விஷ்ணுவின் ஒளிப்பதிவு படத்திற்கு நல்ல மைலேஜை கொடுத்துள்ளது.

கோர்ட் பிரச்சனைகளில் தலையிடும் கருப்பசாமி, ஒரு எல்லை வரைதான் அவருக்கு அதிகாரம் என இன்ட்ரெஸ்டிங்கான ஐடியாவைப் பிடித்துள்ளார் இயக்குநர் ஆர்.ஜே பாலாஜி. ஆனால் திரைக்கதையில் எமோஷ்னலும் லாஜிக்கும் ஒருங்கே இணையவில்லை. சில காமெடி காட்சிகள் பின்பாதியில் ஆறுதலாக அமைந்திருந்தாலும் எங்குமே ப்ளாஸ்ட் மொமெண்ட் கிடைக்கவில்லை. முந்தைய சூர்யா படங்களை ஒப்பிடும்போது இது பரவாயில்லை என்ற ஆறுதலை மட்டுமே கருப்பு வழங்குகிறது
2.75/5

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kollywood Voice