Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகும் "இரட்டையர்"!

சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகும் "இரட்டையர்"!

Kollywood Voice 2 hrs ago

Asia Iconic Studios சார்பில் ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன் மற்றும் வினோத் கண்ணன், இணை தயாரிப்பாளர்- ஹரிஹரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கத்தில், முற்றிலும் மாறுபட்ட களத்தில் சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள "இரட்டையர்" திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி சிவானி ஸ்டுடியோ நிறுவனம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் இதுவரை வந்த திரில்லர் படங்களிலிருந்து மாறுபட்டு, அம்மாவுக்கும் இரட்டை பெண் குழந்தைகளுக்குமான அன்பும் உறவும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு விபத்தில் தந்தை உயிரிழக்கிறார். அதில் தாயின் முகமும் கடுமையாக சேதமடைகிறது. பிளாஸ்டிக் சர்ஜரிக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பும் தாயின் விநோதமான நடத்தைகள், அவரது இரட்டை பெண் குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்க தொடங்குகிறது. இதன் பின்னர் அவர்கள் அந்த மர்மங்களை ஆராய ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் திகில் சம்பவங்களே இப்படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், ஒரு காரேஜ் போன்ற இடத்தில் இரட்டை பெண் குழந்தைகள் உயிர் பயத்துடன் கதவை மூட முயல்கின்றனர். கதவின் மறுபுறம் அவர்களது தாய் கோபத்துடன் கதவை திறக்க முற்படுவது போன்ற காட்சி பரபரப்பை ஏற்படுத்துகிறது. சுற்றியுள்ள கருவிகள், டயர்கள் மற்றும் எண்ணெய் கறைகள் படத்தின் டார்க் மற்றும் இன்டென்ஸ் மூடினை மேலும் வலுப்படுத்துகின்றன.

இதனைத் தொடர்ந்து வெளியான டிரெய்லரும், அம்மாவுக்கும் இரட்டை குழந்தைகளுக்கும் இடையிலான விநோதமான உறவை திகில் கலந்த திரில் அனுபவமாக வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வித்தியாசமான கதைக்களம், அச்சமூட்டும் காட்சிகள் மற்றும் பரபரப்பான திரைக்கதை காரணமாக "இரட்டையர்" திரைப்படத்தின் மீது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படத்தில் அம்மாவாக அபிநயா நடித்திருக்கிறார். இரட்டை குழந்தைகளாக அனுமிதா மற்றும் அனுஷிதா நடித்துள்ளனர். மேலும் சுப்ரமணிய சிவா, சங்கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திட்டக்குடி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு வெறும் 21 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

ஒரு வித்தியாசமான ஹாரர்-த்ரில்லர் அனுபவத்தை தரவிருக்கும் "இரட்டையர்" திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை சிவானி ஸ்டுடியோ நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kollywood Voice