Dailyhunt
தனுஷின் 'கர' படத்தை தொடர்ந்து 'பரீட்' படத்திற்காக பாடிய அருண்ராஜா காமராஜ்!

தனுஷின் 'கர' படத்தை தொடர்ந்து 'பரீட்' படத்திற்காக பாடிய அருண்ராஜா காமராஜ்!

Kollywood Voice 3 weeks ago

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'பரீட்' (Buried).

'வெப்' படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.

'8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி இப்படத்தில் கதாநாயகனாக ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் நாயகிகளாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்சிதா & சாந்தினி தமிழரசன் நடிக்கின்றனர் . பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, 'லப்பர் பந்து' ஜென்சன் திவாகர், வடிவேல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இன்வெஸ்டிகேஷன் திரில்லாராக உருவாகும் இப்படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைக்கிறார்.

சமீபத்தில் 'பரீட்' படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து இயக்குநரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ், இப்படத்திற்காக பாடிய பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kollywood Voice