Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நகைப்பிரியர்களுக்கு ஆறுதல் செய்தி  : தங்கம், வெள்ளி விலை சற்று குறைவு

நகைப்பிரியர்களுக்கு ஆறுதல் செய்தி : தங்கம், வெள்ளி விலை சற்று குறைவு

ர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தங்கம் கடந்த சில மாதங்களாக புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது.

ஈரான் போர் பதற்றம் காரணமாக தங்கம் ஏற்றம் இறக்கத்துடன் காணப்படுகிறது.

தங்கம் சவரனுக்கு ரூ.1600 குறைந்தநிலையில், நேற்றைய தினம் தங்கம் விலை மாற்றமில்லாமல் சவரன் ரூ.1,11,200-க்கும், கிராமுக்கு ரூ.13,900-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியும் விலை மாற்றமில்லாமல் கிராம் ரூ.260-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று மதியம் தங்கம் சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,100-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிலோவிற்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14.050-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ தங்கம் ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: kumutham