Dailyhunt
சென்னை 16 தொகுதிகளில் தவெக முன்னிலை: முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி பின்னடைவு

சென்னை 16 தொகுதிகளில் தவெக முன்னிலை: முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி பின்னடைவு

மிழக சட்டமன்ற தேர்தலில் ஏப்ரல் 23-ம் தேதி பதிவான வாக்குகள் இன்றைய தினம் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் தபால் வாக்குகளில் திமுக முன்னிலை பெற்றது.

தபால் வாக்குகளில் திமுக முன்னிலை பெற்ற நிலையில், முதல் சுற்று தொடங்கிய நிலையில், தவெக முன்னிலை பெற்று வருகிறது.

தபால் வாக்குகளை தொடர்ந்து வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் கிட்டதட்ட 100 தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்றுள்ளது. இதில் சென்னையில் 16 தொகுதியில் தவெக முக்கிய நிர்வாகிகள் களமிறங்கினார்கள். பெரம்பூரில் விஜய், திநகரில் புஸ்ஸி ஆனந்த், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜூனா, எழும்பூரில் ராஜ்மோகன் உள்ளிட்டோர் களமிறங்கினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர், துணைமுதல்வர் உதயநிதி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, துறைமுகத்தில் சேகர்பாபு, சைதாப்பேட்டையில் மா.சுப்ரமணியன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் பின்னடவை சந்தித்து வருகின்றனர். சென்னையில் 16 தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்றிருப்பது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: kumutham