Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் காரை அறிமுகம் செய்யும் மாருதி சுசூகி

100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் காரை அறிமுகம் செய்யும் மாருதி சுசூகி

Lankasri News 18 hrs ago

ந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி நிறுவனம், 100 சதவீதம் எத்தனால் (E100) எரிபொருளில் இயங்கக்கூடிய புதிய Flex-Fuel காரை ஜூன் 5, 2026 அன்று அறிமுகப்படுத்த உள்ளது.

இதனை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

Google அறிமுகப்படுத்திய புதிய Gemini Omni AI., என்ன செய்யும் தெரியுமா?

இந்த கார், பிரபலமான WagonR மாடலில் Flex-Fuel பதிப்பாக வெளியிடப்படுகிறது.

உலக சுற்றுச்சூழல் தினத்தன்று அறிமுகமாகும் இந்த கார், இந்தியாவில் முதல் முறையாக 100 சதவீதம் எத்தனால் பயன்படுத்தும் வாகனமாகும்.

ஏப்ரல் மாதத்தில், சாலை போக்குவரத்து அமைச்சகம் E100 எரிபொருளை சோதனை மற்றும் சான்றிதழ் விதிகளில் சேர்த்தது. இதனால், தூய எத்தனால் வாகனங்கள் அறிமுகம் பெற வழி திறந்தது.

மாருதி சுசூகி நிறுவனத்தின் அதிகாரிகள், "Flex-Fuel வாகனங்கள் உடனடியாக அதிக விற்பனை பெறாது. எத்தனால் எரிபொருள் நிலையங்கள் நாடு முழுவதும் உருவாக சில காலம் பிடிக்கும். அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் மட்டுமே இது பெரிய அளவில் வளர்ச்சி பெறும்" என தெரிவித்துள்ளனர்.

வாகனங்களை எத்தனால் எரிபொருளுக்கு மாற்றுவதால் ஆரம்பத்தில் ரூ.40,000 முதல் ரூ50,000 வரை கூடுதல் செலவு ஏற்படும் என மதிப்பிடுகின்றது.

இந்த முயற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், எரிபொருள் இறக்குமதியை குறைப்பதற்கும் முக்கியமான படியாக கருதப்படுகிறது.

படித்தவுடன் அழிந்துவிடும்., WhatsApp-ன் புதிய வசதி

#MarutiSuzuki #FlexFuel #EthanolCar #WagonR #NitinGadkari #EnvironmentDay #GreenEnergy #SustainableMobility
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News