Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
27 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் புளூ மைக்ரோமூன் - எப்போது பார்ப்பது?

27 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் புளூ மைக்ரோமூன் - எப்போது பார்ப்பது?

Lankasri News 1 week ago

27 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் புளூ மைக்ரோமூன் இன்று வானில் தோன்ற உள்ளது.

புளூ மைக்ரோமூன்

சில வானியல் நிகழ்வுகள் வாழ்நாளில் சில முறை மட்டுமே காட்சியளிக்கும் அரிய நிகழ்வுகளாக இருக்கும்.

அவ்வாறாக 27 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் புளூ மைக்ரோ மூன்(Blue MicroMoon) இன்று(மே 30) இந்தியா உள்ளிட்ட ஆசிய பசுபிக் பகுதிகளில் காட்சியளிக்க உள்ளது. உலகின் பிற பகுதிகளில் 31 ஆம் திகதி காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.

பொதுவாக ஒரு ஆங்கில மாதத்தில் ஒருமுறை மட்டுமே பௌர்ணமி(முழு நிலவு) வரும். 2.5 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒரு மாதத்தில் மட்டும் இருமுறை முழு நிலவு வரும். இவ்வாறாக வரும் 2வது முழு நிலவு புளூ மூன்(Blue Moon) என அழைக்கப்படும்.

இது நீல நிறத்தில் காட்சியளிக்காமல் வழக்கமான வெண்மை நிறத்திலே தோன்றும். இன்று இந்த மாதத்தின் 2வது முழு நிலவான புளூ மூன் தோன்ற உள்ளது.


மாணவிகளுக்கு 3 நாள் மாதவிடாய் விடுமுறை - அரசு திட்டம்

ஆனால் இது வெறும் புளூ மூனாக மட்டுமில்லாமல் புளூ மைக்ரோ மூனாக தோன்ற உள்ளது.

அதாவது நிலவு அதன் நீள்வட்ட பாதியில் சுற்றும்போது, பூமிக்கு மிகத் தொலைவில் உள்ள புள்ளியை எட்டும்போது இந்த முழுநிலவு தோன்றுகிறது.

இதனால் வழக்கமான நிலவை விட 14% அளவில் சிறியதாகவும், 30% பிரகாசம் குறைவாகவும் தெரியும். இப்படியான புளூ மைக்ரோ மூன் 27 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் என கூறப்படுகிறது.

கடைசியாக 31 அக்டோபர் 1999 அன்று காட்சியளித்துள்ளது. இன்று மீண்டும் காட்சியளிக்க உள்ளது.

இதன் பின்னர், மீண்டும் புளூ மூன் 2028 ஆம் ஆண்டிலும், புளூ மைக்ரோ மூன் 2053 ஆம் ஆண்டிலும் காட்சியளிக்கும்.

இன்று மேக மூட்டம் இல்லாமல் இருந்தால் இதனை வழக்கம் போல் வெறும் கண்ணாலே பார்க்க முடியும்

நிலவு வரும் போது, பொன்னிற - ஆரஞ்சு நிற ஒளியுடன் காட்சியளிக்கும். நேரம் செல்ல செல்ல மேலே உயர்ந்து வழக்கமான வெண்மை நிறத்தில் தோன்றும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News