Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
31 மெட்ரிக் டன் தங்கத்தை லண்டனிலிருந்து அமெரிக்காவிற்கு மாற்ற வெனிசுலா திட்டம்

31 மெட்ரிக் டன் தங்கத்தை லண்டனிலிருந்து அமெரிக்காவிற்கு மாற்ற வெனிசுலா திட்டம்

Lankasri News 1 day ago

Venezuela nears 4 Bn dollar gold transfer to New York: வெனிசுலா பிரித்தானியாவில் உள்ள அதன் தங்கத்தை அமெரிக்காவிற்கு மாற்றவுள்ளது.

31 மெட்ரிக் டன் தங்கம்

வெனிசுலா அரசு மற்றும் எதிர்க்கட்சிகள், லண்டனில் உள்ள Bank of England-இல் சிக்கியிருந்த சுமார் 31 மெட்ரிக் டன் தங்கக் கையிருப்பை (மொத்த மதிப்பு 4 பில்லியன் டொலர்) நியூயார்க் நகரில் உள்ள Federal Reserve Bank-க்கு மாற்றும் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நிலையில் உள்ளன.

2019-இல், பிரித்தானிய அரசு நிக்கோலஸ் மதுரோவை சட்டபூர்வமான ஜனாதிபதியாக அங்கீகரிக்க மறுத்ததால், அந்த தங்கம் முடக்கப்பட்டது.

அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோவை பல நாடுகள் ஆதரித்தன. இதனால், வெனிசுலா அரசுக்கு தங்கத்தை பயன்படுத்த முடியாமல் போனது.


நிதியுதவியை குறைத்த பிரித்தானிய அரசு - ஏழை நாடுகள் கடும் பாதிப்பு

இப்போது, இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரொட்ரிகஸ் தலைமையிலான அரசு மற்றும் எதிர்க்கட்சிகள், அரிதாக ஒற்றுமையை வெளிப்படுத்தி, தங்கத்தை மீட்கும் முயற்சியில் இணைந்துள்ளன. ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், வெனிசுலா அரசுக்கு தங்கத்தின் சட்ட உரிமை கிடைக்கும்.

ஆனால், உடனடியாக அதை விற்க முடியாது. இந்த தங்கம் அரசின் கடன்களுக்கு அடமானமாக பயன்படுத்தப்படலாம். குறிப்பாக, ஜூன் மாதம் வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் பணிகளுக்கு நிதி திரட்டுவதில் உதவியாக இருக்கும்.



உலக வங்கி மதிப்பீட்டின்படி, அந்த நிலநடுக்கம் 19.6 பில்லியன் டொலர் அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம், வெனிசுலா அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே அமெரிக்காவின் ஆதரவுடன் நடந்துவரும் பேச்சுவார்த்தைகளின் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

மேலும், இது வெனிசுலா சர்வதேச நிதி நிறுவனங்களுடன் மீண்டும் உறவை மேம்படுத்தும் வழியைத் திறக்கும். இன்னும் சில சட்ட மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன.

இருப்பினும், இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், வெனிசுலா தனது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முக்கியமான வாய்ப்பை பெறும்.


ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக கனடாவிற்கு அழைப்பு

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News