Dailyhunt
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

Lankasri News 2 weeks ago

மெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர், "ஈரான் 10 நாட்களுக்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் அல்லது ஹார்முஸ் நீரிணையை திறக்க வேண்டும்" என மார்ச் 26 அன்று அறிவித்திருந்தார்.

துபாய் அழியும் - அமெரிக்க பொருளாதார நிபுணர் எச்சரிக்கை

இப்போது, அந்த காலக்கெடு முடிவடைய 48 மணி நேரமே உள்ள நிலையில், ட்ரம்ப் தனது Truth Social பதிவில், "நான் ஈரானுக்கு 10 நாட்கள் கொடுத்தேன். நேரம் விரைந்து கொண்டிருக்கிறது. 48 மணி நேரத்தில் நரகம் பொழியும். கடவுளுக்கே மகிமை!" எனக் கூறியுள்ளார்.

ஈரான், அமெரிக்க தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த 7 நாள் இடைவேளை கோரியதாகவும், அதற்கு பதிலாக ட்ரம்ப் 10 நாள் காலக்கெடு வழங்கியதாகவும் அவர் Fox News-இல் தெரிவித்துள்ளார்.

"அவர்கள் எனது நிர்வாகத்திடம் கூடுதல் நேரம் கேட்டனர். ஆனால், அவர்கள் செய்ய வேண்டியதை செய்யாவிட்டால், நான் அவர்களின் மின் நிலையங்களை அழித்துவிடுவேன்" என அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், ஈரான் நாடாளுமன்றத் தலைவர் கலிபாப், மற்றொரு முக்கிய நீரிணையான Bab el-Mandeb குறித்து மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகளாவிய எண்ணெய், LNG, கோதுமை, அரிசி, உரம் போன்ற பொருட்களின் போக்குவரத்து அந்த நீரிணை வழியாக நடைபெறுகிறது.

ட்ரம்ப் விடுத்துள்ள 48 மணி நேர எச்சரிக்கை, அமெரிக்கா-ஈரான் மோதலை மேலும் தீவிரப்படுத்தும் அபாயத்தை வெளிப்படுத்துகிறது.


இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல்

#Trump #IranWar #HormuzStrait #USIranConflict #MiddleEast #GlobalPolitics #OilCrisis

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News