Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
AI ஒருபோதும் மனிதர்களுக்கு மாற்றாகாது- இந்திய வம்சாவளி CEO கருத்து

AI ஒருபோதும் மனிதர்களுக்கு மாற்றாகாது- இந்திய வம்சாவளி CEO கருத்து

Lankasri News 4 days ago

செயற்கை நுன்ன்னறிவு (AI) ஒருபோதும் மனிதர்களுக்கு மாற்றாகாது என Glean நிறுவன CEO தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் 7.2 பில்லியன் டொலர் மதிப்பீடு பெற்ற Glean நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO அரவிந்த் ஜெயின் (IIT Delhi பழைய மாணவர்) AI குறித்து இந்த வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார்.


Fortune Workplace Innovation Summit-இல் பேசிய அவர், "AI ஒருபோதும் மனிதர்களை மாற்றாது. அது மனிதர்களை மேம்படுத்தும், அவர்களின் வேலை தரத்தை உயர்த்தும்" என்று கூறியுள்ளார்.

தற்போது பல தொழில்நுட்ப நிறுவனங்கள் AI காரணமாக பணியாளர்களை நீக்கும் நிலையில், அரவிந்த் ஜெயின், "நாங்கள் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுடன் பணியாற்றுகிறோம். எந்த வேலையும் AI காரணமாக நீக்கப்படவில்லை" என்று கூறியுள்ளார்.

அவரது கருத்து, Anthropic நிறுவனத்தின் CEO டாரியோ அமோடை மற்றும் JPMorgan தலைவர் ஜேமி டைமன் போன்றோரின் எச்சரிக்கைகளுக்கு மாறானதாக உள்ளது. அவர்கள், AI எதிர்காலத்தில் வெள்ளை காலர் வேலைகளில் பாதியை நீக்கிவிடும் என்று எச்சரித்துள்ளனர்.

அரவிந்த் ஜெயின், Microsoft-இல் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கி, Google-இல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக Search, Maps, YouTube போன்ற தயாரிப்புகளில் பணியாற்றினார்.

பின்னர் Rubrik நிறுவனத்தை இணைந்து தொடங்கி, 2019-இல் Glean-ஐ நிறுவினார். Glean, நிறுவனங்களின் ஆவணங்கள் மற்றும் பயன்பாடுகளில் சிதறியுள்ள தகவல்களை எளிதாக தேடிக்கொடுக்கிறது.

Glean-ன் மதிப்பீடு 2022-இல் 1 பில்லியன் டொலரிலிருந்து 2025-இல் 7.2 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.

Google அறிமுகப்படுத்திய புதிய Gemini Omni AI., என்ன செய்யும் தெரியுமா?

#ArvindJain #IITDelhi #Glean #AI #ArtificialIntelligence #TechNews #SiliconValley #FutureOfWork

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News