Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஐரோப்பிய நாடொன்றுக்கு 5000 வீரர்களை அனுப்பும் அமெரிக்கா., நேட்டோ வரவேற்பு

ஐரோப்பிய நாடொன்றுக்கு 5000 வீரர்களை அனுப்பும் அமெரிக்கா., நேட்டோ வரவேற்பு

Lankasri News 2 days ago

மெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், போலந்து நாட்டிற்கு கூடுதலாக 5000 துருப்புகளை அனுப்புவதாக ஆறிவித்துள்ளார்.

இதற்கு முன் 4000 வீரர்களை அனுப்பும் திட்டம் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள நேட்டோ (NATO) பொதுச்செயலாளர் மார்க் ரூட்டோ, ஐரோப்பா தொடர்ந்து அமெரிக்காவை சார்ந்து இருப்பதை குறைத்து வரும் எனக் கூறியுள்ளார்.

அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ, ஹெல்சிங்போர்க் நகரில் நடைபெறும் வெளிநாட்டு அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன், கூட்டாளிகள் அதிக பொறுப்புகளை ஏற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

போலந்து ஜனாதிபதி கரோல் நவ்ரோக்கியை ஆதரித்துள்ள ட்ரம்ப், Truth Social தளத்தில் தனது முடிவை அறிவித்தார். போலந்து ஜனாதிபதி, "புடினை நிறுத்தும் ஒரே உலகத் தலைவர் ட்ரம்ப் தான்" என முன்பு கூறியிருந்தார்.

இதே நேரத்தில், அமெரிக்கா ஜேர்மனியில் இருந்து 5,000 துருப்புகளை திரும்பப் பெறும் முடிவும் எடுத்துள்ளது. இதனால் ரஷ்யாவிற்கு தவறான செய்தி செல்லும் அபாயம் இருப்பதாக சில குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஐரோப்பிய படைத் தளங்களில், ஜேர்மனியில் 36,000 படைகள், இத்தாலியில் 12,000, பிரித்தானியாவில் 10,000 படைகள் உள்ளன.

போலந்திற்கு கூடுதல் படைகள் அனுப்பப்படுவது, ரஷ்யா-உக்ரைன் போரின் சூழ்நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியாவின் மூன்றாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக மாறியுள்ள நாடு

#USTroops #Poland #NATO #DonaldTrump #EuropeSecurity #RussiaUkraineWar #MilitaryDeployment #GlobalPolitics
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News