அமெரிக்காவுடன் நீண்டகாலமாக நிலவி வரும் வர்த்தக மோதல்களில் புதிய திருப்பமாக, சீனாவின் வர்த்தக அமைச்சகம் (MOC) சனிக்கிழமை தனது முதல் 'Blocking Order' சட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
இதன் மூலம், அமெரிக்கா விதித்துள்ள தடைகளை சீன நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஐந்து முக்கிய சீன பெட்ரோ கேமிக்கல் நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் Hengli Petrochemical (Dalian) Refining Co., Shandong Shouguang Luqing Petrochemical Co., Shandong Jincheng Petrochemical Group, Hebei Xinhai Chemical Group, Shandong Shengxing Chemical Co. ஆகியவை அடங்கும்.
8.6 பில்லியனுக்கு மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆயுதங்கள்., அமெரிக்கா அவசர ஒப்புதல்
அமெரிக்க நிதி அமைச்சகத்தின் OFAC (Office of Foreign Assets Control) இந்த நிறுவனங்களை "Specially Designated Nationals (SDN)" பட்டியலில் சேர்த்து, அவர்களின் சொத்துகளை முடக்கி, பரிவர்த்தனைகளைத் தடை செய்தது.
இதற்கு பதிலளித்த சீனா, வெளிநாட்டு சட்டங்கள் தனது நாட்டின் நிறுவனங்களின் இயல்பான வர்த்தக நடவடிக்கைகளை பாதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.
ஐ.நா. அனுமதி இல்லாமல் அமெரிக்கா விதிக்கும் ஒருதலைப்பட்ச தடைகள் சர்வதேச சட்டத்திற்கும், நாடுகளுக்கிடையேயான உறவுகளின் அடிப்படை விதிகளுக்கும் முரணானவை என சீன அரசு தெரிவித்துள்ளது.

