Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அமெரிக்கா வழங்கிய பாதுகாப்பு: ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த மெர்ஸ்க் கப்பல்

அமெரிக்கா வழங்கிய பாதுகாப்பு: ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த மெர்ஸ்க் கப்பல்

Lankasri News 2 weeks ago

ஹார்முஸ் ஜலசந்தியை மெர்ஸ்க் கப்பல் கடந்து இருப்பது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

ஹார்முஸை கடந்த மெர்ஸ்க்

டென்மார்க்கின் பிரபல கப்பல் போக்குவரத்து நிறுவனமான மெர்ஸ்க்(Maersk) அமெரிக்க ராணுவத்தின் நேரடி பாதுகாப்பு உதவியுடன் தனது வணிக கப்பலை ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க செய்துள்ளது.

மத்திய கிழக்கில் கடல் வழி போக்குவரத்தை பாதுகாக்கும் வகையில் திங்கட்கிழமை அன்று இந்த கடல் வழி பயணம் வெற்றிகரமாக நடந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்ஸ்க் நிறுவனம் இது தொடர்பாக தெரிவித்த கருத்தில், கப்பல் பாரசீக வளைகுடாவை கடக்க அமெரிக்க ராணுவம் பாதுகாப்பு வழங்கியதாக தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஹார்முஸ் ஜலசந்தியில் அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த செயல்பாடுகள் குறித்த அறிக்கையை அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு(CENTCOM) வெளியிட்டுள்ளது.

அதில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இரண்டு கப்பல்கள் அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்புடன் கடந்ததாக CENTCOM அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News