Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அமெரிக்கா-ஈரான் இடையே கொள்கை உடன்பாடு: ஹார்மூஸ் நீரிணை திறப்பு எப்போது?

அமெரிக்கா-ஈரான் இடையே கொள்கை உடன்பாடு: ஹார்மூஸ் நீரிணை திறப்பு எப்போது?

Lankasri News 23 hrs ago

போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

இருதரப்பு ஒப்புதல்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நடவடிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன.

ஏற்கனவே இரு தரப்பிற்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் 60 நாட்கள் நீட்டிப்பது தொடர்பான உடன்பாடு இரு தரப்பிற்கும் இடையே. விவாதிக்கப்பட்டு வருகின்ற்ன.

பிலிப்பைன்ஸில் இடிந்து விழுந்த 9 மாடி கட்டிடம்: டஜன் கணக்கான தொழிலாளர்கள் சிக்கி தவிப்பு

இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது மற்றும் போர் நிறுத்தம் தொடர்பான முக்கிய கொள்கை உடன்பாட்டை இருநாடுகளும் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அப்புறப்படுத்த ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஒப்பந்தம் இன்னும் முறைப்படி கையெழுத்து ஆகவில்லை என்றும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி ஆகிய இருவரின் ஒப்புதலுக்காக காத்துள்ளது.

இந்த ஒப்புதல் செயல்முறைக்கு பல நாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News