Dailyhunt
அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் சிக்கிய ஈரானிய முக்கிய நபர்: எழுந்த கண்டனம்

அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் சிக்கிய ஈரானிய முக்கிய நபர்: எழுந்த கண்டனம்

Lankasri News 2 weeks ago

தெஹ்ரானில் ஒரு குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் காயமடைந்தார்.

வெளியுறவுக் கொள்கை பிரமுகர்

ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கமல் கராஸி (Kamal Kharazi) பரவலாக மதிக்கப்படும் வெளியுறவுக் கொள்கை பிரமுகராகக் கருதப்படுகிறார்.

இந்த நிலையில், தெஹ்ரானில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடம் தாக்கப்பட்டுள்ளது. அதில் கமல் கராஸி காயமடைந்ததாக தெரிய வந்துள்ளது.


லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 40-க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் உயிரிழப்பு

இவர் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ஜே.டி.வான்ஸுடனான சந்திப்பை ஏற்பாடு செய்ய உதவுதற்காக பாகிஸ்தான் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளை மேற்பார்வையிட்டு வந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானிய அதிகாரிகள் கண்டனம்

டொனால்ட் ட்ரம்ப் மோதலை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாக வலியுறுத்தி வரும் நிலையிலும், அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களை 'இராஜதந்திரத்தைத் தடம் புரளச் செய்யும் முயற்சி' என்று ஈரானிய அதிகாரிகள் கண்டித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலின் இராணுவ நோக்கம் என்னவென்பதோ அல்லது கராஸியின் சரியான உடல்நிலை என்னவென்பதோ தெளிவாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News