Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அனிருத் - காவ்யா திருமண வரவேற்பு; குவிந்த அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர்

அனிருத் - காவ்யா திருமண வரவேற்பு; குவிந்த அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர்

Lankasri News 1 day ago

Political leaders attend anirudh kavya wedding reception: சென்னையில் நடைபெறும் அனிருத் - காவ்யா திருமண வரவேற்பில், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

அனிருத் - காவ்யா திருமண வரவேற்பு

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் SRH அணி உரிமையாளர் காவ்யா மாறனுக்கு கடந்த நவம்பர் 11 ஆம் திகதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெற்றது.

இதில், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்வில் அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விட்டு சென்றார்.

மேலும், சன் குழும தலைவர் கலாநிதிமாறன், நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், மநீம தலைவர் கமலஹாசன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் எஸ்.தாணு, நடிகர் சதீஸ், ராகவா லாரன்ஸ், கார்த்தி, கார்த்திக், பிரபு, நடிகை ராதிகா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News