Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அணு ஆயுதத் தடையை நீக்க திட்டமிட்டுள்ள ஐரோப்பிய நாடு

அணு ஆயுதத் தடையை நீக்க திட்டமிட்டுள்ள ஐரோப்பிய நாடு

Lankasri News 3 weeks ago

ரோப்பிய நாடொன்று அணு ஆயுதங்கள் மீதான தடையை நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம்

லிதுவேனியாவின் நாடாளுமனறத்தில், அனைத்து அரசியல் கட்சிகளும், நாட்டின் அரசியலமைப்பில் உள்ள அணு ஆயுதங்கள் மீதும், வெளிநாட்டு இராணுவ தளங்கள் அமைப்பதற்கும் தடை விதிக்கக்கூடிய சட்டங்களை நீக்க ஒப்புக்கொண்டுள்ளன.

ரஷ்யாவின் நடவடிக்கைகள் காரணமாக ஐரோப்பாவில் சூழ்நிலைமோசமடைந்துள்ள நிலையில் சட்டத்தில் இந்த முக்கியமான மாற்றத்தை கொண்டுவர உள்ளதாக லிதுவேனியா அறிவித்துள்ளது.

அரசியலமைப்பில் மாற்றம் செய்ய, நாடாளுமன்றத்தில் இரண்டு முறை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும்.

1990-களில் சோவியத் ஒன்றியத்திலிருந்து விடுபட்டபின், லிதுவேனியா இந்தத் தடையை சட்டத்தில் சேர்த்திருந்தது.

சூழ்நிலை மிகவும் மோசமாகியுள்ளது...

லிதுவேனியாவின் ஜனாதிபதி கிதானஸ் நவுசேடா, "இன்றைய புவியியல் சூழ்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. எங்கள் அரசியலமைப்பு வேறு காலத்தில் எழுதப்பட்டது" என்று கூறினார்.

"இப்போதைக்கு அணு ஆயுதங்களை சேமிக்க திட்டமில்லை. ஆனால் சூழ்நிலை மாறினால் நடவடிக்கை எடுக்க தடைகள் இருக்கக் கூடாது" என்று நவுசேடா கூறியுள்ளார்.


துபாய் Duty Free லொட்டரியில் 2 இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்

லிதுவேனியா, ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதியும், பெலாரஸ் எல்லையும் பகிர்ந்து கொண்டுள்ளது. 2022-இல் உக்ரைனில் ரஷ்யா போரை தொடங்கியப் பிறகு, லிதுவேனியா தனது பாதுகாப்புச் செலவுகளை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2027-ஆம் ஆண்டில் ஜேர்மன் இராணுவப் படை அங்கு நிரந்தரமாக தங்கி பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த உள்ளது.

இந்த திருத்தம் இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் வாய்ப்பு உள்ளது. லிதுவேனியா, அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் தொடர்ந்து உறுப்பினராக இருக்கும் என்றும் உறுதி செய்துள்ளது.

இதேபோல், 4 மாதங்களுக்கு முன் பின்லாந்தும் அணு ஆயுதத் தடை சட்டத்தை நீக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.



Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News