Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அறுவடைக்குத் தயாராக காத்திருந்த உணவுப்பயிர்: சுவிஸ் மாகாணமொன்றில் அதிர்ச்சி

அறுவடைக்குத் தயாராக காத்திருந்த உணவுப்பயிர்: சுவிஸ் மாகாணமொன்றில் அதிர்ச்சி

Lankasri News 3 weeks ago

சுவிஸ் மாகாணமொன்றில் அறுவடைக்குத் தயாராக காத்திருந்த உணவுப்பயிரை யாரோ திருடிச் சென்றுவிட்டதைத் தொடர்ந்து, விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அறுவடைக்குத் தயாராக காத்திருந்த உணவுப்பயிர்

சுவிட்சர்லாந்தின் Fribourg மாகாணத்திலுள்ள Delley என்னும் கிராமத்தில் வாழ்ந்துவரும் Ruegsegger குடும்பம், தங்கள் நிலத்தில் ஆஸ்பராகஸ் தாவரங்களை பயிர் செய்துள்ளது.

இந்த ஆஸ்பராகஸ், வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கொண்ட உணவுப்பொருளாகும்.

ஜீரணத்திற்கும், இரத்தச் சர்க்கரை அளவையும், கொழுப்பையும், இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துவதற்கும் உகந்தது என கருதப்படும் ஆஸ்பராகஸ், புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கக்கூடியது, நோயெதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தக்கூடியது என பல நல்ல குணாதிசயங்களைக் கொண்ட தாவரமாகும்.

சுவிட்சர்லாந்தில் ஆஸ்பராகஸ் கிலோ 8.50 முதல் 20 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை விற்பனையாகிறது. 20 சுவிஸ் ஃப்ராங்குகள் என்பது இலங்கை மதிப்பில் 8,303.94 ரூபாய் ஆகும்.

புலம்பெயர்தலுக்கு ஆதரவாக ஒரு நாடே ஒன்றிணையும் ஆச்சரியம்

இந்நிலையில், தங்கள் நிலத்தில் ஆஸ்பராகஸ் தாவரங்களை பயிர் செய்திருந்த Ruegsegger குடும்பம் அறுவடைக்காக காத்திருக்க, யாரோ மர்ம நபர்கள், இரண்டு வயல்களில் வளர்ந்திருந்த சுமார் 300 கிலோ ஆஸ்பராகஸையும் திருடிச் சென்றுவிட்டார்கள்.

விடயம் என்னவென்றால், இந்த திருட்டைச் செய்தவர்கள் யாரோ சில சந்தர்ப்பவாதிகள் அல்ல. ஆஸ்பராகஸ் குறித்து நன்கறிந்த அனுபவம் மிக்க யாரோதான் திட்டமிட்டு தொழில்முறைப்படி நுணுக்கமாக ஆஸ்பராகஸை அறுவடை செய்துள்ளார்கள்.

ஈரான் போரால் உணவுப்பொருட்களின் விலைகள் உயர்ந்துவரும் நிலையில், ஆயிரக்கணக்கான சுவிஸ் ஃப்ராங்குகள் மதிப்புடைய ஆஸ்பராகஸ் திருட்டுப் போனதால் அந்தக் குடும்பம் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News