Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பிரான்ஸ் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் 35 வேட்பாளர்கள்

பிரான்ஸ் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் 35 வேட்பாளர்கள்

Lankasri News 3 weeks ago

பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், அவரது இடத்துக்கு 35 பேர் போட்டி போடுகிறார்கள்.

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் 35 வேட்பாளர்கள்

இப்படி மிதவாத இடதுசாரியினர், மையம் மற்றும் மைய வலதுசாரிகள் என பல பிரிவுகளிலிருந்து ஏராளமான போட்டியாளர்கள் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருப்பது, முன்னணியில் இருக்கும் தீவிர வலதுசாரிகள் சுலபமான வெற்றி பெற வழிவகை செய்துவிடலாம் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

அப்படி வலதுசாரி வேட்பாளர் ஒருவர் பிரான்சின் ஜனாதிபதியாவாரானால், அது ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பெரும் அடியாக அமைந்துவிடும்.

 Tom Nicholson/

பிரான்சிலிருக்கும் ஒரு தேசியவாதத் தலைவர், ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கும் முடிவுகளை நிலைகுலையச் செய்யலாம், ஐரோப்பிய ஒன்றியச் சட்டத்தின் மேலாதிக்கத்திற்குச் சவால் விடுத்து, ஒற்றைச் சந்தையையும் ஷெங்கன் தடையற்ற பயண மண்டலத்தையும் சீர்குலைக்கும், 'பிரான்சுக்கே முன்னுரிமை' என்ற செயல்திட்டத்தை முன்னெடுக்கக்கூடும்.

ஆக, பிரான்சின் முக்கிய கட்சிகள் இணைந்து செயல்படாவிட்டால், அடுத்த ஆண்டு இதே நேரம் வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது பெரிய பொருளாதாரமும் அணுசக்தி நாடுமான பிரான்சை ஆளும் நிலை உருவாகிவிடும் என எச்சரிக்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News