பிரித்தானியாவில் 80 வயது முதியவர் உயிரிழந்த சம்பவத்தில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
80 வயது மூதாட்டி உயிரிழப்பு
பிரித்தானியாவின் கார்ன்வால் ஹெல்சன் அருகே உள்ள ஆஷ்டன்(Ashton) பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டார்.
இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் இந்த குற்ற சம்பவம் தொடர்பாக டெவோம் மற்றும் கார்ன்வால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உயிரிழந்த நிலையில் கிடந்த மூதாட்டியின் உடலை கண்டெடுத்தனர்.
போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் தாக்குதல்: காசாவில் இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை
விசாரணையை தீவிரப்படுத்திய பொலிஸார், பென்சான்ஸ் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
மேலும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு தற்போது முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

