Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பிரித்தானியாவில் மக்கள் ஆரோக்கியமாக வாழும் காலம் 2 ஆண்டுகள் சரிவு

பிரித்தானியாவில் மக்கள் ஆரோக்கியமாக வாழும் காலம் 2 ஆண்டுகள் சரிவு

Lankasri News 3 weeks ago

பிரித்தானியாவில் மக்கள் ஆரோக்கியமாக வாழும் காலம் கடந்த பத்து ஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் குறைந்துள்ளதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

2012-2014 காலத்தில், ஆண்கள் சராசரியாக 62.9 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் 2022-2024-இல் அது 61 ஆண்டுகளாகக் குறைந்துள்ளது.

பிரித்தானியாவில் விமான நிலைய ஸ்லாட் விதிகள் தளர்வு., மற்ற நாடுகளுக்கும் அழைப்பு

பெண்களுக்கான ஆரோக்கியமாக வாழும் காலமும் 63.7 ஆண்டுகளிலிருந்து 61 ஆண்டுகளாகக் குறைந்துள்ளது.

உலகின் 21 உயர்ந்த வருமான நாடுகளில், ஆரோக்கிய வாழ்நாள் குறைந்த நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்றாகும். அமெரிக்காவைத் தவிர, மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்த நாடு பிரித்தானியாவாகும்.

பிரித்தானியாவில் ஓய்வு பெறும் வயது 66 ஆகும். 2026-இல் அது 67-ஆக உயர்கிறது. ஆனால் மக்கள் ஆரோக்கியமாக வாழும் காலம் ஓய்வு பெறும் வயதுக்கு முன்னரே முடிவடைகிறது.

இதனால், பலர் ஓய்வு பெறும் நேரத்தில் ஏற்கனவே உடல்நல பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

மேலும், பிரித்தானியாவில் பணக்கார பகுதிகளுக்கும் வறிய பகுதிகளுக்கும் இடையே ஆரோக்கிய வாழ்நாள் வித்தியாசம் மிக அதிகம் என ஆய்வு கூறுகிறது.

உதாரணமாக, லண்டன் புறநகர் ரிச்மண்ட் பகுதியில் ஆண்கள் 69.3 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்கின்றனர். ஆனால் பிளாக்பூல் பகுதியில் அது 50.9 ஆண்டுகள் மட்டுமே ஆரோக்கியமாக வாழ்கின்றனர்.

அமெரிக்காவின் தடையை மீறி ஹார்முஸில் பயணித்த ரஷ்ய பில்லியனரின் சொகுசுப் படகு

பிரித்தானியாவின் ஆரோக்கிய நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அரசுகள் நீண்டகால நடவடிக்கைகளை எடுக்காததால், பொருளாதார மற்றும் சமூக செலவுகள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

#UKHealth #LifeExpectancy #HealthStudy #PublicHealth #BritainNews #HealthInequality #UKRetirement
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News