RAF said about uk last crewed fighter jet: செயற்கை நுண்ணறிவு போர் விமான இயக்கத்திலும் ஆதிக்கம் செலுத்த உள்ளதாக பிரித்தானியாவின் RAF வான்படை தலைமை மார்ஷல் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்த இருப்பதால், பிரித்தானியாவின் உருவாகும் அடுத்த தலைமுறை போர் ஜெட் விமானம், கடைசி ஆட்கள் இயக்கும் போர் விமானமாக இருக்கலாம் என RAF வான்படை தலைமை மார்ஷல் தெரிவித்துள்ளார்.
Stealth போர் விமானம்
பிரித்தானியா, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து ஆறாம் தலைமுறை Stealth போர் விமானத்தை உருவாக்க உள்ளன.
42 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தவருக்கு மறுக்கப்பட்ட குடியுரிமை - இறுதியாக 76 வயதில்...
இந்த செயல்படுத்தும் திட்டமான குளோபல் காம்பாட் ஏர் புரோகிராமிற்கு (GCAP) ஒரு குழு தேவைப்படுகிறது என்றும், ஆனால் எதிர்கால திட்டங்கள் பெரும்பாலும் ட்ரோன்களாகவே இருக்கும் என்றும் RAF-யின் வான்படை தலைமை மார்ஷல் சர் ஹார்வ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் போர் விமானத்திலும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவால்
போர் ஜெட் விமானம் குறித்து அவர் கூறுகையில், "AI ஆதிக்கம் செலுத்தவிருப்பதால், பிரித்தானியாவின் அடுத்த தலைமுறை போர் ஜெட் விமானம் நாம் உருவாக்கும் கடைசி ஆட்கள் இயக்கும் போர் விமானமாக இருக்கலாம்.
செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்ட ஆட்கள் இல்லாத விமானங்கள், Propellers-களில் இருந்து ஜெட் விமானங்களுக்கு மாறியதைப் போலவே, இராணுவ விமானப் போக்குவரத்தை ஆழமாக மாற்றியமைக்கும். எதிர்கால RAF, Typhoons மற்றும் F-35 ரக விமானங்களை தன்னாட்சி அமைப்புகளுடன் இணைக்கும்" என தெரிவித்துள்ளார்.


