Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற மூன்று பெண்களுக்கு நேர்ந்த துயரம்

பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற மூன்று பெண்களுக்கு நேர்ந்த துயரம்

Lankasri News 3 weeks ago

ங்கிலக்கால்வாய் வழியாக பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் புலம்பெயர்வோர் நால்வர் பரிதாபமாக பலியாகியுள்ளார்கள்.

புலம்பெயர்வோர் நான்கு பேர் பலி

இன்று காலை 6.00 மணியளவில், பிரான்சிலுள்ள Dunkirk துறைமுகத்தினருகே சிறிய ரப்பர் படகொன்று புறப்படுவதைக் கண்டதாக பிரான்ஸ் கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

சிறிது நேரத்திற்குள், அந்த படகில் மூன்று பெண்கள் சுயநினைவிழந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக அவர்களை மீட்டு கரைக்குக் கொண்டுவந்து, அவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்ததாக தெரிவித்துள்ள பிரான்ஸ் கடலோரக் காவல் படையினர், ஆனாலும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை என்று கூறியுள்ளனர்.


ரஷ்யப் பெண்ணை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ள பிரான்ஸ்: யார் அந்தப் பெண்?

இந்நிலையில், அவர்கள் மூவரும் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும், அவர்கள் முறையே சுமார் 30, 40 மற்றும் 50 வயதுடையவர்கள் என்றும் தி டெலிகிராஃப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், Dannes என்னுமிடத்தில், மற்றொரு புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, அவரது படகில் பழுது ஏற்பட, அவரும் பலியாகியுள்ளார்.

ஆக, இன்று ஒரே நாளில் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது புலம்பெயர்வோர் நான்கு பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News