இன்றைய டிஜிட்டல் உலகில் QR குறியீடுகள் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. உணவக மெனு, பார்க்கிங் மீட்டர்கள், கட்டண செயலிகள், டீ கடை, காய்கறி கடை, பூக்கடை என பல இடங்களில் காணப்படுகின்றன.
ஆனால், இந்த QR குறியீடுகளை பயன்படுத்தும்போது கவனம் தேவை என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மோசடி செய்பவர்கள், போலியான QR குறியீடுகளை பயன்படுத்தி மக்களிடமிருந்து வங்கி விவரங்கள், கடவுச்சொற்கள், OTP, கார்டு விவரங்கள் போன்றவற்றை திருடுகின்றனர். இந்த மோசடி 'Quishing' என அழைக்கப்படுகிறது.

QR குறியீடுகள் ஸ்கேன் செய்யும் வரை அதன் உண்மையான இணைய முகவரி தெரியாது. இதனால் போலி தளங்களை அடையாளம் காண்பது சிரமமாகிறது.
மோசடிகள் பொதுவாக உண்மையான QR குறியீடுகளின் மேல் ஸ்டிக்கர் ஒட்டி, பயனர்களை போலி தளங்களுக்கு திருப்புகின்றனர்.
இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதை இங்கே காணலாம்.
3,000 ஆண்டுகள் பழமையான மர்மத்தை உடைத்த AI
பாதுகாப்பான QR ஸ்கேன் விதிகள்:
- QR குறியீட்டை ஸ்கேன் செய்தவுடன் உடனே திறக்காமல், முதலில் Preview பார்க்க வேண்டும்.
- இணைய முகவரி சரியாக உள்ளதா, வங்கி தளங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளதா என கவனிக்க வேண்டும்.
- குறுகிய அல்லது சந்தேகமான URL-களை தவிர்க்க வேண்டும்.
- OTP, கடவுச்சொல், கார்டு விவரங்கள் கேட்கும் QR குறியீடுகளை உடனே தவிர்க்க வேண்டும்.
- பொது இடங்களில் ஒட்டப்பட்ட QR குறியீடுகளை கவனமாக பார்க்க வேண்டும்.
- உங்கள் மொபைல் Default Camera App-ஐ பயன்படுத்தி ஸ்கேன் செய்ய வேண்டும். மூன்றாம் தரப்பு QR Scanner Apps-ஐ தவிர்க்க வேண்டும்.
"ஒவ்வொரு QR குறியீடும் தெரியாத இணைய இணைப்பாக கருதுங்கள். Scan - Preview - Verify - Open என்ற முறையை பின்பற்றினால் பாதுகாப்பாக இருக்கலாம்" என சைபர் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கின்றன.
முதல் முழுமையான மின்சார காரை அறிமுகப்படுத்திய Ferrari

