Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Dancing Missile: ஈரான் பயன்படுத்திய புதிய செஜ்ஜில் ஏவுகணை

Dancing Missile: ஈரான் பயன்படுத்திய புதிய செஜ்ஜில் ஏவுகணை

Lankasri News 8 months ago

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தனது புதிய செஜ்ஜில் (Sejjil) ஏவுகணையை பயன்படுத்தியுள்ளது.

இது சுமார் 2,000 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையாகும்.


இது நேட்டோவின் போர் அல்ல- ட்ரம்ப் கோரிக்கையை நிராகரித்தது ஜேர்மனி

முக்கியமாக, இது திட எரிபொருள் (Solid Fuel) பயன்படுத்துவதால், மிக வேகமாக ஏவப்பட முடியும். இதனால் எதிரிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பே தாக்குதல் நடத்தும் திறன் அதிகரிக்கிறது.

ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்ததாவது, "Wave 54" எனப்படும் இராணுவ நடவடிக்கையின் போது, இந்த ஏவுகணைகள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கட்டளை மையங்கள் மற்றும் முக்கிய இராணுவ வசதிகளை குறிவைத்து தாக்கின.

டெல் அவிவில் 140-க்கும் மேற்பட்ட இடங்களில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. சில பகுதிகளில் குடியிருப்பு வீடுகள் மற்றும் அமெரிக்க தூதரக குடியிருப்பு சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

செஜ்ஜில் ஏவுகணை, 1990-களில் உருவாக்கப்பட்டு 2008-ல் முதல் முறையாக சோதிக்கப்பட்டது. பின்னர் மேம்படுத்தப்பட்ட வழிகாட்டி மற்றும் GPS தொழில்நுட்பத்துடன் செஜ்ஜில்-2 பயன்படுத்தப்படுகிறது.

தற்போது ஈரான் செஜ்ஜில்-3 எனப்படும் 4,000 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய புதிய மொடலை சோதித்து வருகிறது.

இந்த ஏவுகணை, உயரத்தில் திசை மாற்றி பறக்கும் திறன் கொண்டதால், இஸ்ரேலின் Iron Dome பாதுகாப்பு அமைப்பைத் தவிர்க்கும் திறன் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் இதற்கு "டான்சிங் மிசைல்" என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது.


அமெரிக்க தளங்களை அழிக்க ஈரானுக்கு உதவும் ரஷ்யா- ஜெலென்ஸ்கி 100 சதவீதம் உறுதி

Iran Sejjil missile, Dancing missile Iran, US Israel conflict 2026, Iron Dome evasion Iran #Iran #SejjilMissile #DancingMissile
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News