Dailyhunt
ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம்: மக்ரோன் முன்வைத்த கோரிக்கை

ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம்: மக்ரோன் முன்வைத்த கோரிக்கை

Lankasri News 3 weeks ago

மெரிக்கா ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அமைதி உடன்பாட்டிற்கு மக்ரோன் வரவேற்பு

ஈரான் அமெரிக்கா இடையே நிலவி வந்த போர் பதற்றம் உலக அளவில் கவலையை ஏற்படுத்தி வந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே புதிய போர் நிறுத்த அமைதி ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் நாட்டையும் உள்ளடக்குவது என்பது ஒப்பந்தத்திற்கான முழுமையான வெற்றியாக அமையும் என்று மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.


15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை: ஐரோப்பிய நாடொன்றின் தீர்க்கமான முடிவு

இந்த புதிய ஒப்பந்தமானது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படும் என புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மக்ரோன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2018 ஆண்டு முதல் பிரான்ஸ் வலியுறுத்தி வரும் அணுசக்தி, ஏவுகணை மற்றும் பிராந்திய சிக்கலுக்கு இந்த புதிய ஒப்பந்தம் தீர்வை ஏற்படுத்தும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு ஐரோப்பிய தலைவர்கள் ஈரான் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தத்தை வரவேற்ற போதிலும், லெபனானில் தொடர்ந்து வரும் தாக்குதல் நடவடிக்கைகள் குறித்து கவலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News