Dailyhunt
ஈரான் உடன்படாவிடில் எல்லாவற்றையும் தகர்த்துவிடுவேன் - டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் உடன்படாவிடில் எல்லாவற்றையும் தகர்த்துவிடுவேன் - டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

Lankasri News 3 weeks ago

ஹார்முஸ் நீரிணை முழுமையாக மீண்டும் திறக்கப்படாவிட்டால், ஈரானிய மின் உற்பத்தி நிலையங்களை அழித்துவிடுவேன் என டொனால்ட் ட்ரம்ப் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்காலிக போர் நிறுத்தம்

ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் போர் ஆறாவது வாரத்திலும் தொடர்கிறது. இதனை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுக்கும் ஒரு தற்காலிக போர் நிறுத்தத்திற்கான நிபந்தனைகள் குறித்து மத்தியஸ்தர்கள் விவாதித்து வருவதாகக் கூறப்படுகிறது.


100 புலம்பெயர்வோருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: 70க்கும் அதிகமானோர் மாயம்

அதே சமயம் சமீபத்திய நாட்களில் ஈரான் பல அமெரிக்க முன்மொழிவுகளை நிராகரித்தது.

இதனால் ட்ரம்பின் செவ்வாய்க்கிழமை காலக்கெடுவுக்குள் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்புகள் 'மிகக் குறைவு' என பல உள்வட்டாரங்கள் Axios-யிடம் தெரிவித்துள்ளன.

உள்கட்டமைப்புகளைத் தாக்குவேன்

இந்த நிலையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஹார்முஸ் நீரிணை முழுமையாக மீண்டும் திறக்கப்படாவிட்டால், ஈரானின் குடிமை உள்கட்டமைப்புகளைத் தாக்குவேன், நாளை மின் உற்பத்தி நிலைய தினம் ஆக இருக்கும் என எச்சரித்தார்.

ஈரான் ஒரு உடன்பாட்டிற்கு எட்டவில்லை என்றால், நான் அங்குள்ள எல்லாவற்றையும் தகர்த்துவிடுவேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் 45 நாள் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவது குறித்து ஈரானும், அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News