Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
எல் நினோ மிக உக்கிரமாக இருக்கும்... சாதனைகளை முறியடிக்கும்: எச்சரிக்கும் நிபுணர்கள்

எல் நினோ மிக உக்கிரமாக இருக்கும்... சாதனைகளை முறியடிக்கும்: எச்சரிக்கும் நிபுணர்கள்

Lankasri News 1 week ago

ற்போதைய 'எல் நினோ' வானிலை நிகழ்வு அதன் ஒட்டுமொத்த தீவிரத்தில் புதிய சாதனைகளைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஒரு முன்னணி நிபுணர் எச்சரித்துள்ளார்.

நரகத்தின் வெப்பத்தை

எல் நினோவால் கடும் வறட்சி, பெருவெள்ளம் மற்றும் பிற தீவிர வானிலை நிகழ்வுகள் குறித்த கவலைகளும் தற்போது எழுந்துள்ளது. இந்த முறை எல் நினோ நரகத்தின் வெப்பத்தை எதிரொலிக்கும் என்றே Tim Stockdale என்ற எல் நொனோ தொடர்பில் ஆய்வு செய்து வரும் நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிகழ்வைக் கண்காணித்து வந்துள்ள Tim Stockdale, இந்த ஆண்டின் எல் நினோ இதுவரை கண்டிராத ஒன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது உருவாகியுள்ள எல் நினோ நிகழ்வு சாதனைகளை முறியடிக்கத் தவறினால், அது மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கும் என்றும் ஸ்டாக்டேல் கூறியுள்ளார்.


வெப்பமடையும் பெருங்கடல்கள், வலுவாகும் எல் நினோ: தீவிர வானிலையை நோக்கி உலகம்

கண்டிப்பாக அது சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன், ஆனால் அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

எல் நினோ மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகைக்கு அருகிலான பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலையை உயர்த்துகிறது; இது காற்று, வளிமண்டல அழுத்தம் மற்றும் மழைப்பொழிவு முறைகளில் உலகளாவிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

இதுவரை இல்லாத

இது பொதுவாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது மற்றும் சுமார் ஒன்பது முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கிறது.

மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றத்துடன் இணைந்து, கடந்த எல் நினோ நிகழ்வானது, 2023-ஆம் ஆண்டை இதுவரை பதிவானவற்றிலேயே இரண்டாவது வெப்பமான ஆண்டாகவும், 2024-ஆம் ஆண்டை இதுவரை இல்லாத அளவு அதிக வெப்பம் கொண்ட ஆண்டாகவும் மாற்றக் காரணமாக அமைந்தது.

இந்த வானிலை நிகழ்வு உலகின் சில பகுதிகளில் கடுமையான வறட்சியையும், வேறு சில பகுதிகளில் பெருவெள்ளத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News