Dailyhunt
ஹார்மோஸ் சாவி தொலைந்து விட்டது - ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு நக்கல் செய்த ஈரான்

ஹார்மோஸ் சாவி தொலைந்து விட்டது - ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு நக்கல் செய்த ஈரான்

Lankasri News 1 week ago

ஹார்மோஸ் நீரிணையை திறக்க டிரம்ப் விடுத்துள்ள கடுமையாக மிரட்டலுக்கு ஈரான் நக்கலாக பதிலளித்துள்ளது.

ஈரானை மிரட்டும் ட்ரம்ப்

ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் 5வது வாரத்தை எட்டியுள்ளது. போர் தொடங்கியதில் இருந்தே உலகின் முக்கிய எரிபொருள் வழங்கல் பாதையான ஹார்மோஸ் நீரிணையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஈரான் குறிப்பிட்ட சில நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்குகிறது.

இதனால் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் போரை நிறுத்த வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், ஈரான் ஒப்பந்தத்திற்கு வர வேண்டும் அல்லது ஹார்மோஸ் நீரிணையை திறக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.

இந்த கெடு நாளை முடிவடைய உள்ள நிலையில், அதற்கு முன்னர் நீரிணையை திறக்கவிட்டால் ஈரானின் எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் தகர்க்கப்படும். உங்களுக்கு நரகத்தை காட்டுவோம் என கடும் மிரட்டல் விடுத்துள்ளார்.


ஈரானை நோக்கி JASSM ஏவுகணைகள் - மோசமான தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா

நக்கலாக பதிலளித்த ஈரான்

ஈரானின் உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பிராந்தியம் முழுவதும் உள்ள உட்கட்டமைப்புகள் தாக்கி அழிக்கப்படும் என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

போரால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு உள்ளிட்ட தமது கோரிக்கைகளை ஏற்காமல் போரை நிறுத்த முடியாது, ஹார்மோஸ் நீரிணையை திறக்க முடியாது என ஈரான் உறுதியாக உள்ளது.

அதேவேளையில், ஜிம்பாபேவில் உள்ள ஈரான் தூதரகம் சாவி தொலைந்து விட்டது என ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு நக்கலாக பதிலளித்துள்ளது.

அதற்கு, தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஈரான் தூதரகம் சாவி பூந்தொட்டியின் அடியில் உள்ளது. எங்களின் நண்பர்களுக்கு மட்டும் திறப்போம் என தெரிவித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News